SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீர்காழி அருகே காத்திருப்பு கீழச்சாலையில் சின்னந்தியம்மன் மாட்டு வண்டியில் வீதி உலா

2018-06-11@ 14:45:33

சீர்காழி:  சீர்காழி அருகே கீழச்சாலையில் சின்னந்தியம்மன் மாட்டு வண்டியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சீர்காழி அருகே காத்திருப்பு மெயின் ரோட்டில் சின்னந்தியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள அம்மன் ஒவ்வொரு ஆண்டும் கீழச்சாலை கிராமத்திற்கு மாட்டு வண்டியில் சென்று அங்குள்ள மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா செல்வது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான விழாவை முன்னிட்டு காத்திருப்பில் இருந்து சின்னந்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்னபட்சி வாகனத்தில் எழுந்தருளி மாட்டு வண்டி மூலம் கீழச்சாலை கிராமத்திற்கு சென்றடைந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து இரவு அம்மன் மாட்டு வண்டியில் எழுந்தருளி மேள, தாளங்கள் வாண வேடிக்கைகள் முழங்க வீதி உலா வந்த போது பக்தர்கள் மாவிளக்கு போட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்