SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நினைத்ததை அருளும் பிரதோஷ வழிபாடு

2018-06-11@ 10:06:38

நெல்லை சந்திப்பு பகுதியில் மேல வீரராகவபுரத்தில் உள்ளது அருள்மிகு சொக்கநாத சுவாமி கோயில். இது 14ம் நூற்றாண்டை சேர்ந்த மிகவும் பழமையான கோயிலாகும். மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த அழகிய பாண்டிய மன்னன் மதுரை ஸ்ரீசொக்கநாதர் மீனாட்சி அம்மனிடம் ஆழ்ந்த பக்தியும் அன்பும் கொண்டிருந்தார். தினமும் கோவிலுக்கு சென்று சொக்கநாதரை தரிசனம் செய்த பின்புதான் மற்ற பணிகளை தொடர்வார். இந்த நிலையில் சேரமன்னன் புருஷோத்தமன் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து நெல்லை வரை தனது சேர நாட்டின் எல்லையை விரிவுபடுத்த எண்ணி மேற்கு தொடர்ச்சி மலை வழியாக தனது படையுடன் புறப்பட்டான். அதை தனது ஒற்றர் மூலம் அறிந்து அழகிய பாண்டிய மன்னனும் பெரும்படை திரட்டி தற்போது பழைய பேட்டை இருக்குமிடத்தில் முகாம் இட்டு தங்கியிருந்தார்.

இத்தலத்தில் அவருடைய ஆஸ்தான குரு சுந்தர முனிவர் ஆசிரமம் அமைத்து ஆலோசனை கூறிவந்தார். ஒரு நாள் மன்னன் தாமிரபரணி நதியில் நீராடிவிட்டு மதுரை சொக்கநாத பெருமானை தரிசனம் செய்ய முடியவில்லை என வருத்தப்பட்டு தியானம் செய்யும்போது அசரீரி வாக்காக சுந்தர முனிவர் ஆசிரமம் அமைந்த வில்வவனத்தில் வில்வமரத்தின் அடியில் உள்ள எறும்பு மணல் மேட்டில் தான் இருப்பதாக  கூறினார். அதை கேட்ட பாண்டிய மன்னன் அந்த இடத்தை தோண்ட செய்து பார்த்தபோது அதில் அழகிய சிவலிங்கத்தை கண்டு மகிழ்ந்து அந்த இடத்தில் சொக்கநாதர் மீனாட்சி அம்மனுக்கு ஆலயம் எழுப்பி தினமும் பூஜை செய்து மகிழ்ந்துவந்தார். சேரமன்னன் புருஷோத்தமன் தன் படையுடன் வந்து தாக்க இதுதான் நல்ல தருணம் என வந்தபோது சொக்கநாதர் பெருமான் அருளால் பாண்டிய மன்னனின் படைத்தளம் ஆயிரம் மடங்கு பெரியதாக காட்சி தந்தது.

அதைக்கண்டு அச்சமுற்ற புருஷோத்தமன் இதை வெல்வது கடினம், நாம் பார்த்திரா படையாக இது உள்ளதே, இது எப்படி சாத்தியம் என எண்ணி மாறு வேடத்தில் அங்கு வந்தான். அப்போது பாண்டிய மன்னனின் மகள் மனோன்மணியை பார்க்கிறான், அவள் அழகில் தன்னை பறிகொடுத்த சேரமன்னன், நேராக பாண்டிய மன்னனிடம் சென்று நான் சேர மன்னன் புருஷோத்தமன் போரிட வந்தேன். இறைவன் அருளால் உமது மகள் மீது விருப்பம் கொண்டேன், அவளை எனக்கு திருமணம் முடித்துதர வேண்டுகிறேன் என்றான்.

மனோன்மணியும் சேரமன்னனை விரும்பவே இருவருக்கும் திருமணம் நடத்தி மதுரைக்கு அழைத்து சென்றார் என்ற செய்தி உள்ளது. மதுரை மீனாட்சி திருக்கோயில் போலவே இதுவும் சக்திவாய்ந்த கோயிலாகும். மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு பிரதோஷ காலங்களில் அபிஷேகம் கிடையாது. இங்கும் கிடையாது. இங்கிருந்து வடபுறமாக நின்று மீனாட்சியை தரிசனம் செய்தால் மதுரை மீனாட்சியை தரிசனம் செய்த பாக்கியம் கிட்டும். இத்திருக்கோயிலில் பிரதோஷ காலங்களில் சென்று வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இங்கும் மதுரையில் நடப்பது போல் சித்திரை மாதம் மீனாட்சி திருக்கல்யாணம், நவராத்திரி திருவிழா,  கந்தசஷ்டி விழா,  கார்த்திகை சோமவாரம் போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்