SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்பிக்கையோடு கேட்டால் சாய்நாதர் அனைத்தும் தருவார்

2018-06-07@ 09:54:43

ஸ்ரீ சாய்பாபாவின் பாதங்களில் முழுமையாக சரணடைவதன் மூலம் ஒரு பக்தன் ஆன்மீகப் பாதையில் செல்ல முடிவதுடன் அப்பாதையில் செல்வது எளிதாகவும் ஆகிறது. உலகியல் வாழ்வில் உள்ள மனிதன் என்ற நிலையில் உள்ள ஒருவர் ஒரு யோகியாகவோ, சித்தராகவோ என்றோ ஒரேடியாக முன்னேற வேண்டும் என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. இந்தச் சொற்கள் அவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் உபயோகிப்பது பெரும் முட்டாள்தனமாகும்.  பாபாவிடம் அசைக்க முடியாத உறுதியான நம்பிக்கை கொள்வது மிகவும் இன்றியமையாததாகும்.

பாபாவிடம் அவர் தோற்றத்தை நமக்கு வெளிப்படுத்திக் காட்ட தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். செயல் புரிபவர்கள் நாம் அல்ல என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். செயலைச் செய்பவர் என்ற உணர்விலிருந்தும் நாம் விடுபடுதல் அவசியமாகும். செயலைச் செய்பவர் என்ற அந்த உணர்வு, நம் அகங்காரத்திலிருந்து பிறக்கிறது. அது மிக மிக மெதுவாகவே குறைகிறது. பாபா விரும்பினால் அவர் நமக்கு சித்தி, முக்தி அல்லது எதை வேண்டுமானாலும் அளிக்கலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்