SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குறிச்சி சொக்கநாதர் கோயில் வருஷாபிஷேகம் : திரளானோர் தரிசனம்

2018-06-06@ 14:59:59

நெல்லை: குறிச்சி சொக்கநாதர் சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். குறிச்சியில்  பழமை வாய்ந்த சொக்கநாதர் சுவாமி, மீனாட்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. இதையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டு ஹோமம்  முதலான பல்வேறு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு மூலவர் விமானம், அம்பாள் விமானம், பரிவார மூர்த்தி விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

இதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு மகா அபிஷேக அலங்கார தீபாராதனை  நடந்தது. இரவு  பஞ்ச மூர்த்திகளுக்கு புஷ்பாஞ்சலி, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் கிருஷ்ணகுமார் பட்டர், திருநாவுக்கரசு உழவாரப் பணி குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்