SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாரணமங்கலம் மாரியம்மன் கோயில் திருவிழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு

2018-06-05@ 15:41:14

பாடாலூர்:  ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம்  மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 27ம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நாள்தோறும் இரவு  சுவாமி பூக்களால் அலங்கரிக்கப்பட்டு காளை, யானை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. மாரியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று அக்னி சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.  நிகழ்ச்சியில் நாரணமங்கலம், வரகுபாடி, மருதடி, விஜயகோபாலபுரம், நாட்டாடார் மங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்