SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரகனேரி குழுமியானந்த சுவாமி 118 வது மகாகுரு பூஜை விழா

2018-06-05@ 15:08:41

திருச்சி: திருச்சி வரகனேரி குழுமிக்கரையில் கோயில் கொண்டு இருக்கும் குழுமியானந்த சுவாமிகள் 118வது மகா குருபூஜை  விழா நேற்று நடந்தது. திருச்சி வரகனேரி குழுமிக்கரையில் குழுமியானந்த சுவாமிகள் குடிகொண்டுள்ள கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 118வது மகா குருபூஜை விழா நேற்று நடந்தது. காலை 6 மணியளவில் காவிரியிலிருந்து திருமஞ்சனம் கொண்டு வரப்பட்டது. அதை தொடர்ந்து 9 மணியளவில் குழுமியானந்த சுவாமிகள் வாரவழிபாட்டு குழுவினரின் பன்னிரு திருமுறை, திருப்புகழ் திருஅருட்பா பாராயணம் பாடப்பட்டது. பின் காலை 11 மணிக்கு ேஹாமம், அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பிற்பகல் 12 மணிக்கு  அன்னதான நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மாலை 6 மணியளவில் காஞ்சிகாமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் தென்காசி பரமசிவம் குழுவினர் மற்றும் பழனி குருஞான சக்திவேல் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது.  இன்று (5ம் தேதி) காலை 9 மணிக்கு சுந்தரர் தேவாரம் முற்றோதுதலும், 12மணிக்கு மகா அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை 7 மணியளவில் குழுமியானந்த சுவாமியின் வார வழிபாட்டு குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-10-2018

    17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்