SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-06-02@ 10:14:04

ஜூன் 2, சனி  

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை. சென்னை சைதை காரணீஸ்வரர், வேளூர் வசந்த உற்சவ ஆரம்பம், நம்பியாண்டார் நம்பி குருபூஜை. காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் 1000 கால் மண்டபம் மெத்தை உற்சவம். காஞ்சி ஸ்ரீவரதர் தேவராஜஸ்வாமி திருக்கோயில் ரதோற்சவம்.

ஜூன் 3, ஞாயிறு  

சஷ்டி. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி. திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் விடையாற்று உற்ஸவம்.

ஜூன் 4, திங்கள்  

வாஸ்து நாள். (காலை.10.06  காலை 10.42) கீழ் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. சிரவண விரதம். தருமை ஆதீனம் 26வது குருமஹாசந்நிதானம் சுவாமிகள் காவிரியில் திருமஞ்சனமாடி குருமூர்த்த வழிபாடு, காஞ்சி வரதர் திருக்கோயில் புண்ணியகோடி விமானம்.

ஜூன் 5, செவ்வாய்  

சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல். தருமை ஆதீனம் ஸ்ரீஞானபுரீஸ்வர சுவாமி திருக்கோயிலில் 108 சிவபூஜகர்கள் சிவபூஜை புரிதல், தருமை 26வது குரு மஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக சுவாமிகள் பட்டினப்பிரவேசம். பாம்பன் ஸ்வாமிகள் குருபூஜை. மன்னார்குடி பெரியவா ஜெயந்தி.

ஜூன் 6, புதன்  

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரஸிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

ஜூன் 7, வியாழன்  

சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

ஜூன் 8, வெள்ளி  

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபத்திற்கு எழுந்தருளி பின் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-11-2018

    21-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்