SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைபேறு அருளும் ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள்

2018-06-02@ 09:35:31

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் நல்லூர் கிராமத்தில் சுமார் 1500 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஆத்ம குணங்கள் நிறைந்த வேத வித்வனர்கள் வாழ்ந்து வந்தனர். காளை வாகனம் உடைய சிவனும், குபேரனும், இந்திரனும் சேர்ந்து இவ்வூரில் அருள்பாலித்து வந்துள்ளனர். இதனால் மிகுந்த கருணை உள்ளம் உடைய அந்தணர்கள் இவ்வூரில் நிறைந்து இருந்தார்களாம். பயனை எதிர்பாராமல் நான்கு வேத பாராயணமும், வேத வேள்விகளை நடத்தி வந்தனர். இதனால் இந்த ஊர் வைணவ உலகத்துக்கு மிகவும் சிறந்த ஊராக கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கருத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த பகுதியில் வேதமும், வேள்வியும், நடைப்பெற்றதன் காரணமாக திருமகள், நாமகள், துர்கை ஆகியோர் நித்தியவாசம் செய்தனர் என்று கோயில் வரலாறு கூறுகிறது.

முன்னொரு காலத்தில் தல யாத்திரை சென்ற அந்தணர்கள் சிலர் இங்கு தங்கினர். தாங்கள் கொண்டு வந்திருந்த பெருமாள் சிலையை வைத்து பூஜை செய்தனர். மறுநாள் அவர்கள் புறப்பட்டபோது, இவ்விடத்தில் இருந்து சிலையை எடுக்க முடியவில்லை. அப்போது மகாவிஷ்ணு காட்சிகொடுத்து ‘தான் இத்தலத்தில் தங்க விரும்புவதாக’ கூறினாராம். அந்தணர்கள் மகிழ்ச்சியோடு இங்கு கோயில் எழுப்பினர். சுவாமி காண்போரை வசீகரிக்கும் அழகுடன் காட்சியளிப்பதால் சுந்தரவரதராஜர் என்று அழைக்கப்படுகிறது. கருவறையில் சுவாமி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். உடன் தாயார்கள் இல்லை. அந்தணர்கள் பிரதிஷ்டை செய்து வணங்கிய சுந்தர வரதராஜர், தனி சன்னதியில் உள்ளார். ஒரே கல்லில் இவரது சிலை அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது.

இவர் பிரயோக சக்கரம், வலம்புரி சங்கு, இடது கீழ் கரத்தில் தண்டம் மற்றும் அபய கரத்துடன் காட்சி தருகிறார். கருடாழ்வாரை பெருமாள் எதிரே வணங்கியபடிதான் பார்த்திருப்போம். அரிதாக இக்கோயிலில் சுந்தரவரதராஜரின் வலது பாதத்திற்கு அருகில் கருடாழ்வார், மண்டியிட்டு வணங்கியபடி இருக்க, சுவாமி அவருக்கு மேலே தன் வலது கையால் ஆசிர்வதித்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. இந்த கருடாழ்வார் பக்தர்களின் குறைகளை பரந்தாமனிடம் பரிந்துரைத்து நிவாரணம் செய்பவர் என கருதப்படுவதால், ‘பரிந்துரைக்கும் கருடாழ்வார்’ என அழைக்கப்படுகிறார்.

இத்தலத்து சுவாமிக்கு பிள்ளைபேறு நாயகன் என்ற பெயரும் உண்டு. இவரிடம் வேண்டிக்கொள்ள புத்திரபேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆண்டுதோறும் ஊர்மக்கள் சுபிட்சம் பெறவேண்டியும், மழை வேண்டியும், இயற்கை பேரழிவில் இருந்து பொதுமக்களை காப்பாற்றவேண்டியும் அன்னகூடா உற்சவ விழா நடக்கிறது. அப்போது உற்சவர்களை அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி சுவாமி முன்பாக வேட்டியில் சாதத்தை கொட்டி அதன் மீது நெய், உள்ளிட்ட பொருட்களை போடுவார்கள். பின்னர் அருகில் வைக்கப்பட்டு இருக்கும் சாம்பார் பாத்திரத்தில், சுவாமி முன்பாக வைக்கப்பட்ட சாதத்தை கொட்டி கலந்து, அதனை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவார்கள். இந்த நிகழ்சியில் நல்லூர் மட்டுமின்றி சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பிராமணர்கள் வந்து சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதை காணலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்