SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமயம் அருகே மது எடுப்பு திருவிழா

2018-05-31@ 11:59:57

திருமயம்: திருமயம் அருகே நடைபெற்ற மது எடுக்கும் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மது எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள செங்கீரை செல்லாயி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற மண்டகப்படி திருவிழாவில் தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தது. நேற்றுமுன்தினம் 9ம் திருவிழாவை முன்னிட்டு மது எடுக்கும் திருவிழா நடந்தது. விழாவில் செங்கீரை, ஆயிங்குடி, குருந்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் தென்னை பாலையால் அலங்கரித்தனர். செல்லாயி அம்மன் பிறந்த இடமாக கருதப்படும் ஆயிங்குடி மந்தையில் இருந்து அப்பகுதி பெண்கள் மது குடங்களை தலையில் சுமந்து குருந்தங்குடி வழியாக செங்கீரை செல்லாயி அம்மன் கோயிலில் இறக்கி வைத்து வழிபாடு செய்தனர். இதனை தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. இரவு வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்