SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று முதல் கோடை திருநாள் : மூலவர் சேவை கிடையாது

2018-05-30@ 14:10:25

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்றுமுதல் கோடை திருநாள் துவங்கி விமரிசையாக நடைபெறுகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தாயார்(ரங்கநாச்சியார்) சன்னதியில் இன்று முதல் ஜூன் 8 வரை கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) நடைபெறுகிறது. இன்று முதல் ஜூன் 3 வரை வெளிக்கோடை திருநாள் நடைபெறுகிறது. இன்று மாலை 6.30மணிக்கு ரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 7 மணிக்கு வெளிக்கோடை மண்டபம் சேர்கிறார். 8 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 8.45க்கு மூலஸ்தானம் சென்றடைவார். 4 முதல் 8ம் தேதி வரை உள்கோடை திருநாள் நடை பெறுகிறது.

4ம் தேதி மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். 6.30க்கு வெளிக்கோடை மண்டபம் அடைகிறார். இரவு 7.30க்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பிறகு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்படுகிறார். 7.45க்கு உள்கோடை ஆஸ்தான மண்டபம் வந்தடைகிறார். 8.45க்கு உள்கோடை மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 9.45க்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானத்தை அடைகிறார். 9 முதல் 15ம் தேதி வரை ரங்கநாச்சியார் வசந்தம் திருநாள் நடைபெற உள்ளது. 9ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு ரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 6.30க்கு வசந்த மண்டபத்தை அடைகிறார். இரவு 8.30 மணிக்கு அலங்காரம் வகையாறு கண்டருள்கிறார். விழா காலங்களில் தினமும் இரவு 8.30க்கு மேல் மூலவர் சேவை கிடையாது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்