SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எழுமலை அருகே பக்தர்கள் கத்திப்போட்டு நேர்த்திக்கடன்

2018-05-30@ 13:08:28

உசிலம்பட்டி: எழுமலை அருகேயுள்ள இ.கோட்டைப்பட்டி ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. விழாவில் நேற்று பக்தர்கள் இ.கோட்டைப்பட்டியில் இருந்து உத்தப்புரம் மாரியம்மன் கோயிலில் இருந்து அம்மன்கரகம் புறப்பாடு நடைபெற்றது. அப்போது பக்தர்கள் தங்களது உடம்பில் கத்திபோட்டு கரகம் முன்பு பக்தி பரவசத்துடன் அம்மனை அழைத்து வந்தனர். உத்தப்புரத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து இ.கோட்டைப்பட்டியில் உள்ள ராமலிங்கசௌடேஸ்வரி அம்மன்கோயிலில் உள்ள மூலஸ்தானத்தில் அம்மன்கரகம் வைக்கப்பட்டது.

தொடர்ந்து பக்தர்கள் கோயில் முன்பாக உடம்பில் கத்திபோடும் நிகழ்ச்சி நடத்தி முடித்து கத்திகள் அனைத்தும் அம்மன் சன்னதியில் வைக்கப்பட்டது. பெண்கள் முளைப்பாரி எடுத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர். கலைநிகழ்ச்சிகளை தொடர்ந்து நாளை இ.கோட்டைப்பட்டியிலுள்ள முக்கிய வீதிகளில் அம்மன் கரகம் ஊர்வலத்துடன் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கோயில் அருகில் கிணற்றில் கரகம் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்