SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தஞ்சை பெரிய கோயிலில் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா

2018-05-30@ 13:06:58

தஞ்சை: மழை பெய்ய வேண்டி தஞ்சை பெரிய கோயில் பெரியநாயகி அம்மனுக்கு 1,500 கிலோ எடை கொண்ட மலர்களால் பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் தஞ்சை பெரிய கோயில் பெருவுடைநாயகி அம்மனுக்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பூச்சொரிதல் விழா பக்தர்களால் நடத்தப்படும். இதன்படி இந்தாண்டு பூச்செரிதல் விழா நேற்று நடந்தது.

தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் உள்ள நால்வர் மண்டபத்தில் இருந்து ரோஜாப்பூ, நாகலிங்க பூ, முல்லை பூ, மருக்கொழுந்து, மருவூ, ஜாதிப்பூ, மகிழம்பூ, தாழம்பூ, தாமரை பூ, மந்தாரப்பூ, அல்லிப்பூ, செண்கப்பூ, பாரிஜாதப்பூ, செம்பருத்தி, சாந்தினிபூ, மருதாணிப்பூ, மனோரஞ்சிதம் பூ, சம்பங்கி, சாமந்தி, பவளமல்லி, அரளிப்பூ, வெட்டிவேர் உள்ளிட்ட 51 வகையான மலர்கள் எடுத்து வரப்பட்டது. கோயிலை சுற்றி பக்தர்கள் வலம் வந்த பின்னர் 1,500 கிலோ பூக்களால் பெரியநாயகி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்