SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆதிகும்பேஸ்வரர், பாணபுரீஸ்வரர் கோயில்களில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

2018-05-30@ 13:02:42

கும்பகோணம்:  கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் மற்றும் பாணபுரீஸ்வரர் கோயில்களில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் வைகாசி மாத திருக்கல்யாண உற்சவம் கடந்த 25ம் தேதி நடந்தது. இதைதொடர்ந்து தினம்தோறும் காலை, மாலையில் சுவாமி வீதியுலா, அம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இந்நிலையில் நேற்று காவிரி ஆற்றின் பகவத் படித்துறையில் தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று மகா சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

இதேபோல் கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் பஞ்சமூர்த்தி மகாபிஷேகம், பாணபுரீஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம், சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. நேற்று காலை காவிரி பகவத் படித்துறையில் அஸ்திரதேவருக்கு அபிஷேகம், காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இரவில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. இன்று காலை 11 மணிக்கு ருத்ராபிஷேகம், இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கு வீதியுலா நடக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்