SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்த வாரம் என்ன விசேஷம்?

2018-05-26@ 10:02:29

மே 26, சனி     

அரியக்குடி ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம். திருமோகூர் காளமேகப் பெருமாள் வைரச்சப்பரத்தில் பவனி. திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் திருக்கல்யாணம். ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள் ஜெயந்தி.

மே 27, ஞாயிறு  

மகாபிரதோஷம். மாயவரம், திருவாடானை, நயினார்கோவில், திருப்பத்தூர் இத்தலங்களில் சிவபெருமான் தேரோட்டம்.

மே 28, திங்கள்   

பெளர்ணமி. வைகாசி விசாகம். நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி பழனி முருகப் பெருமான் திருமோகூர் காளமேகப் பெருமாள் தேரோட்டம் அக்னி நட்சத்திர முடிவு. நம்மாழ்வார். திருவண்ணாமலை கிரிவலம் 28.5.2018 இரவு 7.39 முதல் 29.5.2018 இரவு 8.32வரை. காஞ்சிபுரம்  ஸ்ரீகுமரகோஷ்டம் ஷண்முகர் ரதம், குரோம்பேட்டை, குமரன்குன்றம் லக்ஷார்ச்சனை. பழநி பெரியநாயகியம்மன் தேர். திருப்போரூர் சிதம்பரஸ்வாமிகள் குருபூஜை. முடி கொண்டானில் ஆலங்குடி பெரியவா ஆராதனை.

மே 29, செவ்வாய்  

அரியக்குடி ஸ்ரீனிவாசப் பெருமாள், காட்டுபரூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் தலங்களில் தேரோட்டம். சீர்காழி திருஞானசம்பந்தருக்கு ரக்ஷாபந்தனம், ஸ்ரீரங்கம் ஏகவசந்தம் சாத்துமுறை, திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் பிரம்மோற்சவம் முடிவு, சக்ரபாணி ஸ்வாமி தெப்பம். மன்னார்குடி கருட சேவை, காஞ்சிபுரம் ஸ்ரீகுமரகோஷ்டம் ஸ்ரீவள்ளி கல்யாணம், காஞ்சி ஸ்ரீவரதர் கருடன். காஞ்சி மகாபெரியவா ஆராதனை.

மே 30, புதன்   

காட்டுபரூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் தெப்போற்ஸவம் கண்டருளல். தருமை சகோபுர ரிஷப வாகனம், காஞ்சி ஏகாம்பர நாதர் திருக்கோயில் சர்வ தீர்த்தம் தெப்பம். சென்னை சேலையூர் ஸ்கந்தாஸ்ரமம் சாந்தானந்த ஸ்வாமிகள் ஆராதனை.

மே 31, வியாழன்  

காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலம். முருக நாயனார், திருஞானசம்பந்தர், திருநீலநக்கர், திருநீலகண்டபாணர் குருபூஜை. ஆச்சாள்புரம், திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம், பின்னிரவு விடியல் ஐக்கியம். தஞ்சை முத்துப்பல்லக்கு.

ஜூன் 1, வெள்ளி  

சங்கடஹரசதுர்த்தி. திருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜப் பெருமாள் புதிய வெள்ளி ரதத்தில் பவனி. குமரகுருபர சுவாமி குருபூஜை. சிவஸ்தலங்களில் வைசாகப் பெருவிழா ஆரம்பம், தருமை ஞானம்பிகா சமேத ஸ்ரீஞானபுரீஸ்வர சுவாமிக்குத் திருக்கல்யாணம், வெள்ளி ரதக்காட்சி. திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மாகேஸ்வர பூஜை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்