SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தை பாக்கியம் தரும் கட்டையன்விளை பத்ரகாளி அம்மன்

2018-05-25@ 09:45:49

நாகர்கோவில் அருகேயுள்ள கட்டையன்விளை ஊரில் பத்ரகாளி யம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அம்மன் வடதிசை நோக்கி அமர்ந்திருப்பதால் வடபத்ரகாளியம்மன்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. பல தலைமுறை கடந்து இங்கு இருக்கும் இந்த கோயில் கடந்த 2002ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. அதன்பின் இங்கு சிலை வழிபாடு தொடங்கியது. 2017ம் ஆண்டு கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடந்தது. கும்பாபிஷேகம் அன்று கருடபகவான் தரிசனம் செய்த அரிய நிகழ்வு நடந்தது. இது அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் அனைவரையும் பரவசமடைய செய்தது. இந்த கோயில் மூலஸ்தானத்தில் பத்ரகாளிஅம்மன், ஒரு பக்கம் உஜ்ஜனிஅம்மன், மறுபக்கம் முத்தாரம்மன் விக்ரகம் அமைந்துள்ளது. மேலும் பெருமாள்சுவாமி, சுடலைமாடசுவாமி, வைரவநாதர் சாமிகளும் உள்ளனர். ஐயப்பன் சன்னதி, சாஸ்தா சன்னதி தனித்தனியாக உள்ளது.

கன்னிமூலையில் சித்திவிநாயகர் சிலை அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் முளைப்பாரி வைப்பது முக்கிய நிகழ்வாக உள்ளது.
சிறுமிகள் கோயிலில் கடும் விரதம் இருந்து காலை மாலை குளித்து ஈரத்துணியுடன் முளைப்பாரிக்கு தண்ணீர் விடுவர். பின்னர் 7 நாட்கள் கழித்து அம்மனுக்கு முளைப்பாரியுடன் கும்மி வழிபாடு நடத்துகிறார்கள். இதனால் அவர்கள் வேண்டுதல் நிறைவேறுகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 3வது வாரம் 8 நாட்கள் திருவிழா நடக்கும். இதற்கு முன்னதாக 2வது வாரம் கால்நாட்டு விழா நடக்கும். திருவிழாவன்று மாலை சுடலைமாட சுவாமி கோயிலில் இருந்து மாவிளக்கு ஊர்வலம் நடக்கும். சிவராத்திரி வழிபாடு, பஜனை, பூஜைகள் நடக்கும். விழாவுக்கு சிங்காரி மேளம், மேளதாளம் முழங்க யானை ஊர்வலம் உள்பட பல முக்கிய நிகழ்வுகள் நடக்கும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

திருவிழாவில் முக்கியமான நிகழ்வாக அமுதம் படைத்தல் நிகழ்வு நடக்கும். விழாவின் முதல் நாள் சுவாமி குறிப்பிடும் பனை மரத்தில் சிறப்பு பூஜை செய்யப்படும். பின்னர் பனை ஏறும் தொழிலாளி பதனீர் அறுவடை செய்வார். அப்போது ஒரே நாள் ஒரே நேரத்தில் அந்த மரத்தில் இருந்து 2 கலையம் பதனீர் கிடைக்கும். இந்த அதிசய நிகழ்வு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த கோயிலில் மிக முக்கியமாக குழந்தை இல்லாதவர்கள் வந்து வேண்டுதல் செய்து குழந்தை பாக்கியம் பெற்று செல்கிறார்கள். குழந்தை பாக்கியம் பெறுகிறவர்கள் கடையம், வேல் போன்றவை காணிக்கையாக செலுத்துகின்றனர். குழந்ைத பாக்கியம் வேண்டியும், திருமண தோஷம் நீங்கவும் இங்கு ஏராளமான பெண்கள் வழிபாடு செய்கின்றனர். இந்த கோயிலில் தினசரி விளக்கேற்றப்படும். ஒவ்வொரு செய்வாய் கிழமையும் வழிபாடுகள் நடத்தப்படும். வேண்டுதல்கள் நிறைவேறும், கேட்டது கிடைக்கும் என்பதால் இந்த கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து பூஜை செய்து செல்கின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-01-2019

  22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • annauniv

  அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

 • jammukashmir

  ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

 • TulipflowerDay

  நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

 • womesrally

  வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்