SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இன்னம்பூர் சீனிவாச பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

2018-05-22@ 15:11:48

கும்பகோணம்: இன்னம்பூர் சீனிவாச பெருமாள் கோயிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பகோணம் அடுத்த இன்னம்பூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சீனிவாசபெருமாள் கோயிலில் 48ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம்  நடைபெற்றது. திருப்பதி திருவேங்கடமுடையான் சன்னதியில் உள்ள உற்சவர் மலையப்ப சீனிவாச பெருமாள்,  நவாப்படையெடுப்பின் போது அக்கோயிலில் உள்ளவர்கள் கும்பகோணம் அருகே இன்னம்பூரில் மலையப்ப சீனிவாச பெருமாளை கொண்டு வந்து பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டனர்.

இத்தகைய சிறப்பு பெற்ற சீனிவாச பெருமாளுக்கு ஆண்டுதோறும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி சீனிவாச பெருமாளுக்கு அனுக்ஞை, மகா சங்கல்பமும், தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள், திருமஞ்சனம், பூர்ணாஹூதி, கலச திருமஞ்சனம் ஆகியவை நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிக்கு திருக்கல்யாண  சீர்வரிசை, ஊஞ்சல் உற்சவமும், மாங்கல்யதாரணமும், இரவு பெருமாள் யானை வாகனத்தில் வீதியுலா புறப்பாடும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சீனிவாச பெருமாள் சத்சங்க சபாவினர் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்