SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பத்திரகாளி அம்மன் கோயில் வருஷாபிஷேகம்

2018-05-18@ 14:24:25

திருச்செந்தூர்: பாட்டக்கரை பத்திரகாளி அம்மன் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். குரும்பூர் அருகே உள்ள பாட்டக்கரையில் பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. கடம்பா குளக்கரையில் இருக்கும் இந்த கோயில் சிற்ப வேலைகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு மகாதிரவிய ஹோமம், பத்திரகாளி அம்மன் மற்றும் பரிவார தெய்வமூல மந்திர ஹோமம், வஸ்த்ராகுதியை தொடர்ந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. 11 மணிக்கு கும்பங்கள் எடுத்து வலம் வந்து விமானதளத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம், மகாதீபாராதனையை தொடர்ந்து அரங்கம் திறப்பு விழா நடந்தது. இரவு 7 மணிக்கு அப்பாத்துரை நாடார் நேசம்அம்மாள் அரங்கத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு அம்மனுக்கு பூ, காய்கனி மற்றும் நிறை மணி காட்சி தீபாராதனை நடந்தது. விழாவில் பக்தி பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் கோயில் தர்மகர்த்தா ஜெயராகவன், விஜயராகவன் மற்றும் சின்னத்துரை, வெள்ளைக்கண்ணு, ஓம் சக்தி தியாகராஜன், சிற்பி கணேசன் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாசரேத் முத்துக்குமார் செய்திருந்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்