SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவகாசி விஸ்வநாதசுவாமி-விசாலாட்சியமன் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம்

2018-05-18@ 14:23:06

சிவகாசி: சிவகாசி விஸ்வநாதசுவாமி விசாலாட்சியமன் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. சிவகாசியில் பழமை வாய்ந்த விஸ்வநாதசுவாமி விசாலாட்சியமன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு வைகாசி பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. .முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் கொடியேற்றப்பட்டு, கொடிமரத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடந்து தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் கோயில் வளாகத்தில் விஸ்வநாதர்விசாலாட்சியம்மன் மற்றும் பிரியாவிடை ஆகியோர் ஊஞ்சலில் அமர்திருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த சுவாமிகளுக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியை சுப்பிரமணி பட்டர் நடத்தினர். நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் சுமதி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா வினையொட்டி தினசரி காலை மற்றும் இரவு சுவாமி வீதி உலா நடைபெறும். மே 25ம் தேதி தேரேட்டம் நடைபெறும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்