SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குந்தாணிபாளையம் நத்தமேடு பாதகாளியம்மன் கோயில் திருவிழா : பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

2018-05-18@ 14:22:32

க.பரமத்தி: கரூர் அருகே குந்தாணிபாளையம் நத்தமேடு பாதகாளியம்மன் அம்மன் கோயில் திருவிழாவில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
கரூர்கொடுமுடி நெடுஞ்சாலையில் கரூர் ஒன்றியம் வேட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குந்தாணிபாளையம் நத்தமேடு பகுதியில் பாதகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை பாதகாளியம்மன் கோயிலில் இருந்து திரளான பக்தர்கள் கொடுமுடிக்கு சென்று, அங்கிருந்து புனித தீர்த்தம், காவடி, பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர்.

பிறகு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 18 வகை மூலிகை பொருட்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பாதகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து பக்தர்களால் பொங்கல் வைக்கப்பட்டு, கிடாவெட்டு நிகழ்ச்சி நடந்தது. பிறகு ஒவ்வொரு பொங்கல் பானையிலும் பொங்கல் எடுக்கப்பட்டு அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை குந்தாணிபாளையம் நத்தமேடு ஊர் பொதுமக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்