SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைத்தீஸ்வரன்கோயிலில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு

2018-05-18@ 14:21:53

சீர்காழி: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இக்கோயிலில் செல்வமுத்துக்குமார சுவாமி, அங்காரகன் சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்கள். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் வைகாசி கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கிருத்திகை மண்டபம் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு மஞ்சள், திரவியபொடி, பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலான 51 வகையான வாசனை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் 3 மணி நேரம் நடந்தது.

தொடர்ந்து நவரத்தின ஆபரணங்கள், மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதினம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு அருட்பிரசாதங்களை வழங்கினார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்