SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழையத்துவயல் மாடன்கோயில் கொடை விழா

2018-05-18@ 14:21:17

நாகர்கோவில்: வாழையத்துவயல் ஸ்ரீமாடன் கோயில் மற்றும் காளியம்மன் கோயில் வருடாந்திர கொடை விழா நேற்று முன்தினம் (16ம் தேதி) தொடங்கியது. முதல் நாள்  நித்திய பூஜை, சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. நேற்று காலை திருவிளக்கு பூஜை, இரவு குடியழைப்பு, அன்னதானம், சமயமாநாடு ஆகியன நடந்தது. விழா நாட்களில் காலை 6 மணிக்கு நித்திய பூஜை, பகல் அன்னதானம் ஆகியன நடக்கிறது.

விழாவின் 3ம் நாளான இன்று (18ம் தேதி) காலை 6.30 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு நைய்யாண்டி மேளம், 8 மணிக்கு வில்லிசை, 8.30 மணிக்கு மேள தாளத்துடன் வட்டபாறை சென்று திருமஞ்சள் நீர், பால்குடம், பன்னீர் குடம் எடுத்து வருதல், பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம்,  மாலை  5 மணிக்கு அம்மன் அலங்கார வாகன ஊர்வலம், மாலை 6 மணிக்கு வில்லிசை,  11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 12 மணிக்கு மாடன் சுவாமிக்கு ஊட்டு மற்றும் அர்த்த சாம பூஜை ஆகியன நடக்கிறது.

நாளை (19ம் தேதி) காலை  10 மணிக்கு பொங்கல் வழிபாடு, 12 மணிக்கு உச்சகால பூஜை, பூப்படைப்பு, மஞ்சள் நீராடல், பகல் 1 மணிக்கு அன்னதானம், 2 மணிக்கு மங்களம் பாடுதல், இரவு 7 மணிக்கு பரிசு வழங்குதல், 8 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை வாழையத்துவயல் ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்