SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முத்துப்பேட்டை பேட்டையில் புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா

2018-05-18@ 14:20:16

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையை அடுத்த பேட்டையில் புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா நடைபெற்றது. முத்துப்பேட்டை அடுத்த பேட்டை கிராமத்தில் உள்ள புகழ் பெற்ற புனித செபஸ்தியார் ஆலயத்தின் 11ம் ஆண்டு தேர் திருவிழா கடந்த சிலதினகளுக்கு முன் பட்டுக்கோட்டை பங்கு தந்தை ஜோசப் செல்வராஜ் அடிகளார் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிலையில் தேர் பவனி நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பட்டுக்கோட்டை உதவி பங்கு தந்தை ஆரோக்கியசாமி அடிகளார் பாடல் திருப்பலியை தொடர்ந்து வாண வேடிக்கைகளுடன் பேட்டை செபஸ்தியார் ஆலயத்திலிருந்து தேர் பவனி புறப்பட்டது.

இந்த தேர் தெற்குத்தெரு, பேட்டை சாலை, பழைய பஸ் ஸ்டான்ட், மன்னார்குடி சாலை வழியாக நள்ளிரவில் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. தேர் பவனி நடைபெற்ற பகுதிகளில் பிற மதத்தினரும் தேரை வரவேற்று வழிபாடு நடத்தினர்.இதில் புனித செபஸ்தியார் ஆலய நிர்வாகிகள் அமல்தாஸ், ஜெயராஜ், சகாயராஜ், டேவிட்ராஜ், சூசைமாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று மாலை புனித கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ramalan_sirapu111

    இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ! : சிறப்பு படங்கள்

  • cake_decor11

    ஆஸ்திரேலிய சர்வதேச கேக் திருவிழா : மனதை கொள்ளை கொள்ளும் கேக் அலங்காரங்கள்

  • RajivGandhi27thanniversary

    ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம் இன்று: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

  • lasvegas_theme111

    அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் மேடிசன் சதுக்கத்தில் வெவ்வேறு தீம்களில் ஜொலிக்கும் பிரம்மாண்ட கோள அரங்கம்

  • rajiv_27anni

    27வது நினைவு தினத்தை அனுசரிக்கும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அரிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்