SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரமலான் கொண்டாட்டம்

2018-05-18@ 14:19:14

பாவங்களை வேரறுக்கும் நோன்பு! 2

இன்று நோன்பு திறக்க: மாலை 6.39 மணி.

நாளை நோன்பு வைக்க: காலை 4.17 மணி. (இந்த நோன்பு நேரம் மதுரைக்கும், தெற்கு, வடக்கில் அதற்கு நேரான ஊர்களுக்கு மட்டும் பொருந்தும். மதுரைக்கு மேற்கில் உள்ள ஊர்களுக்கு 28 கிமீட்டருக்கு ஒரு நிமிடம் கூட்டிக் கொள்ளவும். கிழக்கே உள்ள ஊர்களுக்கு ஒரு நிமிடம் குறைத்துக் கொள்ளவும்)

நோன்பு திறக்க துஆ: ‘‘யா அல்லாஹ். உனக்காக நோன்பு நோற்றேன். உன்னையே ஈமான் கொண்டேன். உன் மீதே நம்பிக்கை வைத்தேன். உன்னுடைய உணவைக் கொண்டே நோன்பு திறக்கிறேன். என் நோன்பை ஏற்றுக்கொள்வாயாக’’.

நோன்பு வைக்க துஆ: ‘‘இந்த வருட ரமலான் மாதத்தின் இன்றைய பர்ழான நோன்பை அல்லாஹ்விற்காக நோற்க நிய்யத் செய்கிறேன்’’.

இதோ ரமலான் மாதத்தின் அற்புத நோன்பு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது. பசித்து, தாகித்து நோற்கிற இந்த நோன்பு முஸ்லிம்களின் மூன்றாம் கடமை பெருமை கொண்டிருக்கிறது. ‘கலிமா’ என்கிற இறை நம்பிக்கை,  தினம் ஐவேளைத் தொழுகை, மூன்றாமிடத்தில் முப்பது நோன்புகள் இருக்கிறது. மேலும், வருவாய் லாபத்தில் இரண்டரை சதவீதம் வழங்கும் ‘ஜக்காத்’ எனும் நான்காம் கடமையும், வசதி படைத்தோருக்கான ‘ஹஜ்’ எனும் இறுதிக்கடமையும் முஸ்லிம்களின் மகத்தான ஐம்பெரும் கடமைகளாகும். இதில் நோன்பு மேன்மை கொண்டிருக்கிறது. ‘நோன்பு’ என்பதன் வேர்ச்சொல், ‘நோல்’ என்பதாகும். இது ‘வலிமை’ பொருள் தருகிறது. அரபி மொழியில் ‘ஸ்வ்மு’ என்பர். இதற்கு ‘தடுத்து நிறுத்துதல்’ அர்த்தமாகும். தான் நுகர உரிமையானவற்றை எல்லாம், தனது மன வலிமையால் தடுத்து நிறுத்தும் வலிமையை ‘நோன்பு’ கொண்டிருக்கிறது. ‘ரமல்’ என்றால் ‘கரித்தல்’ எனும் பொருள் தருகிறது. இந்த ரமலான் மாதத்தில் பசித்து, தாகித்து நோற்கிற நோன்புகள் நம் தீமைகளை தடுத்து, கரித்து வேரறுக்கும் வலிமை கொண்டிருக்கிறது. இந்நாட்களில் மனிதருக்குள் நிறையும் ‘இறையச்சம்’ ஓர் அழகிய ஆன்மிக வாழ்வளிக்கிறது.

(நாளையும் நோற்போம்...)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்