SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் ஸ்ரீகண்ட்

2018-05-18@ 12:38:57

என்னென்ன தேவை?

புளிப்பில்லாத கெட்டித் தயிர் - 2 கப், காய்ந்த திராட்சை - 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 1 டேபிள்ஸ்பூன்,  குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - தலா 1 சிட்டிகை, தேன் - 3 டீஸ்பூன், விருப்பமான பழங்கள் (மாம்பழம், கிவி, ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள்) - யாவும்  கலந்தது 2 கப்.

எப்படிச் செய்வது?

குங்குமப்பூவை சிறிது பாலில் ஊறவைக்கவும். சுத்தமான ஒரு வெள்ளைத் துணியில் தயிரை மூட்டை கட்டி 6 மணி நேரம் தொங்க விட்டு வடிக்கவும்.  இது வடிந்து பந்து போல் கெட்டியாக வந்ததும் கடைந்து கொள்ளவும். பழங்களை தோல் சீவி விதை நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தயிரில்  பழங்கள், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ பால் சேர்த்து கலந்து கண்ணாடி கிண்ணங்களில் போட்டு மேலே காய்ந்த திராட்சை, நட்ஸ் கலவையை தூவி,  தேன் ஊற்றி ஃப்ரிட்ஜில் குளிரவைத்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்