SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கதம்ப இட்லி

2018-05-18@ 12:37:55

என்னென்ன தேவை?

இட்லி அரிசி, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு - தலா 100 கிராம். தாளிக்க - நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு, கடுகு  - 1/2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகு - தலா 1 டீஸ்பூன். முந்திரி - 10, காய்ந்தமிளகாய் - 2, மோர் மிளகாய் - 3, கறிவேப்பிலை,  பெருங்காயத்தூள் - தேவைக்கு, தேங்காய்த்துருவல் - 1/2 கப், சமையல் சோடா - 1 சிட்டிகை, எலுமிச்சம்பழம் - 1, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பு வகைகளை ஒன்றாக கலந்து 2 மணி நேரம் ஊறவைத்து மிக்சியில் ரவை போல் அரைத்து கொள்ளவும். பிறகு 2 மணி நேரம் புளிக்க  விடவும். கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், தேங்காய்த்துருவல்,  உடைத்த முந்திரி ஆகியவற்றை வதக்கி இறக்கி மாவு கலவையில் கொட்டவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு, சமையல் சோடா, உப்பு சேர்த்து கலந்து  கொள்ளவும். டம்ளர் அல்லது கிண்ணத்தில் 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி இட்லி பாத்திரத்தில் 20 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். சிறிது ஆறியதும் எடுத்து இட்லி பொடி, சட்னியுடன் பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்