SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சகல செல்வங்களும் அருளும் செஞ்சி கமலக்கண்ணியம்மன்

2018-05-18@ 09:38:28

விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. வரலாற்றை பறைசாற்றும் இந்த மலைக்கோட்டைக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் கமலக்கண்ணியம்மன் கோயில் அமைந்துள்ளது. செஞ்சிக் கோட்டையை உருவாக்கிய தேசிங்குராஜன் மன்னன்தான் இந்தக்கோயிலையும் கட்டினான். இக்கோயிலில் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கடைசி நாளில் கமலக்கண்ணியம்மன் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெறும்.  'தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலாள் அபிராமி ஸ்ரீ கமலக்கண்ணியம்மன் கடை கண்களே’ என்ற பாடல் செஞ்சி கமலக்கண்ணி அம்மனின் புகழ்பாடுகிறது.

விஸ்வரூப தரிசனம்:

கருவறை முன்பு ஸ்ரீகமலக்கண்ணியம்மன் மூலவர் நின்ற நிலையில் சாந்த சொரூபியாக காட்சி அளிக்கின்றார். கமலக்கண்ணி என்ற பெயரானது தாமரை போன்ற திருவிளங்கும் கண்களை உடையவள் என்று பொருள்படும். இந்த கமலக்கண்ணி அம்மன் செஞ்சிக்கோட்டையை ஆண்ட மன்னர் பரம்பரையின் குல தெய்வம் ஆவார். செஞ்சியை ஆண்ட மன்னன் தேசிங்குராஜன் போருக்குச் செல்லும் போதெல்லாம் இந்த ஆலயத்திற்கு வந்து அம்மன் சன்னதியில் தனது போர்வாளை வைத்து வணங்கி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

பகைவர்கள் படையெடுப்பு:

பகைவர்களின் படையெடுப்பால் செஞ்சிக்கோட்டை சிதைந்து விட்ட நிலையில் அன்னையின் கோயில் மட்டும் பகைவரிடம் இருந்து தப்பியது. செஞ்சிக் கோட்டை அழிவுக்கு பிறகு மன்னர் பரம்பரையை சேர்ந்தவர்கள் வேலூர் மாவட்டம் கலவைக்கு வந்தனர். அவர்கள் புறப்படும் முன்பு கமலக்கண்ணி ஆலயத்தில் இருந்து பிடிமண் எடுத்து வந்து கலவையில் கமலக்கண்ணியம்மன் ஆலயத்தை சச்சிதானந்த சுவாமிகள் முன்னிலையில் கட்டி முடித்தனர். செஞ்சிக்கோட்டையில் நின்ற நிலையில் அருள்பாலிக்கும் கமலக்கண்ணியம்மன், வேலூர் மாவட்டம் கலவையில் படுத்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். செஞ்சிக் கோட்டையில் உள்ள ஸ்ரீகமலக்கண்ணி ஆலயம் முன்பு பலிபீடம் உள்ளது. அங்கு எருமைக்கடா, பன்றி ஆகியவற்றை பலி கொடுத்து வந்தனர்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்:

நீண்டகாலம் குழந்தை இல்லாத தம்பதிகள் கமலக்கண்ணியம்மன் ஆலயத்திற்கு வந்து தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு அம்மன் அருளால் குழந்தைப்பேறு கிடைக்கப்பெறுவதாக ஐதீகம் உள்ளது. இவ்வாறு குழந்தை வரம் கிடைக்கப்பெற்றவர்கள் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை குழந்தையுடன் கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஸ்ரீகமலக்கண்ணியம்மன் சக்தியின் வடிவமாகவும், அதேநேரத்தில் அளவற்ற சக்தியும் கருணையும் உடையவர். மனக்கவலை, குடும்ப கஷ்டங்கள், உடல் நலக்குறைவு என எந்தக்குறை இருந்தாலும் கமலக்கண்ணி அம்மனை தரிசித்தால் குறைகள் நீங்கும். நலம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வர்.

துண்டுச்சீட்டு கட்டுதல்:


பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை துண்டுச் சீட்டில் எழுதி அதனை மாலையாக அம்மனுக்கு அணிவிக்கிறார்கள். இதனாலும் அவர்களின் குறைகள் நீங்கும் என நம்புகிறார்கள். கமலக்கண்ணி அம்மனின் தல விருட்சம் வேம்பு ஆகும். கோயிலை ஒட்டியே ஒரு வேப்பமரம் உள்ளது. இந்த இலைகள் தெய்வீக அம்சம் பொருந்தியது என பக்தர்கள் கூறுகிறார்கள். கோயில் எதிரே சுனை தீர்த்தம் (தீர்த்தக்குளம்) உள்ளது.

செல்வது எப்படி?


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் செஞ்சிக்கோட்டை உள்ளது. பேருந்து மற்றும் ஆட்டோ வசதி உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்