SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை!

2018-05-17@ 14:27:35

என்னைச் சந்திக்க வருகிறவர்கள் எல்லோரும் நான் டாக்டர், நான் வக்கீல், நான் தொழிலதிபர், நான் அரசியல்வாதி என்றே தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். இதுதான் எனக்குக் கவலையாக இருக்கிறது; இதில் கவலைப்பட என்ன இருக்கிறது? எவரும் தன்னை ஒரு மனிதன் என்று இதுவரை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லையே!‘‘கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை அவர் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர். திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறை சாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின் மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்.

கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார். யூதரின்
நாட்டுப்புறங்களிலும், எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரை சிலுவையில் தொங்க வைத்துக் கொன்றார்கள். ஆனால், கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும், அனைத்து மக்களுக்குமல்ல. சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்து கொண்டவர்களுக்கு மட்டுமே அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்த பின்பு அவரோடு உண்டு குடித்த நாங்களே இதற்குச்
சாட்சிகள். மேலும், வாழ்வோருக்கும், இறந்தோருக்கும் நடுவராய்க்கூட கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசு தாம் என்று மக்களுக்குப் பறை சாற்றவும், சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவ மன்னிப்பும் பெறுவர் என்று இறைவாக்கினர்
அனைவரும் அவரைக் குறித்துச் சான்று பகர்கின்றனர் என்று பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர் மீதும் தூயஆவி இறங்கி வந்தது.

பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கையுடையோர், தூய ஆவியின் கொடை பிற இனத்தவர் மீது பொழியப்பட்டதைக்கண்டு மலைத்துப் போயினர்.  ஏனென்றால் அவர்கள் பரவசப் பேச்சுப்பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள்.’’  (திருத்தூதர் பணிகள் 10: 3446)யாரையும் வஞ்சிக்காத ஒருவர், கடவுள் நம்பிக்கையுள்ள ஒருவர் மனதாறச் சொல்லும் எந்த வார்த்தைகளும் உயிர் உள்ளதாக இருக்கிறது. அந்த உயிர் தன் சக்தியைக் காட்டி விடுகின்றது. ஆத்திரத்தில் சொல்லும் வார்த்தை மட்டுமின்றி இயற்கையாக வந்துவிழும் வார்த்தைகளும் பலித்துவிடுகின்றன. எல்லாவற்றிற்கும் தெய்வ நம்பிக்கைதான் காரணம். வஞ்சகமில்லாத ஆத்மா ஒரு வார்த்தை சொன்னாலும் பலிக்கும். நன்றியுடைமை, தெய்வ பக்தி, வஞ்சகமற்ற உள்ளம் இவற்றிற்கு ஆண்டவர் எப்போதும் துணை நிற்கிறார். ‘‘விதையைப் போட்டுவிட்டு கனி வராதா என்று ஏங்கி எதிர்பார்த்து நிற்காமல் விதைத்துக் கொண்டே போ. திரும்பி வந்து பார்க்கும்போது மரத்தில் கனிகள் பழுத்துக் குலுங்கும்.’’

‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kulasaidasaraeight

  வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

 • 18-10-2018

  18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

 • gold_navaratchri11

  நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

 • balore_arrrres1

  சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்