SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரமலான் கொண்டாட்டம்

2018-05-17@ 14:07:20

வந்ததே நோன்பு... தந்ததே உவகை! 1

இன்று நோன்பு திறக்க: மாலை 6.38 மணி.

நாளை நோன்பு வைக்க: காலை 4.17 மணி.

(இந்த நோன்பு நேரம் மதுரைக்கும், தெற்கு, வடக்கில் அதற்கு நேரான ஊர்களுக்கு மட்டும் பொருந்தும். மதுரைக்கு மேற்கில் உள்ள ஊர்களுக்கு 28 கிமீட்டருக்கு ஒரு நிமிடம் கூட்டிக் கொள்ளவும். கிழக்கே உள்ள ஊர்களுக்கு ஒரு நிமிடம் குறைத்துக் கொள்ளவும்)

நோன்பு திறக்க துஆ: ‘‘யா அல்லாஹ். உனக்காக நோன்பு நோற்றேன். உன்னையே ஈமான் கொண்டேன். உன் மீதே நம்பிக்கை வைத்தேன். உன்னுடைய உணவைக் கொண்டே நோன்பு திறக்கிறேன். என் நோன்பை ஏற்றுக்கொள்வாயாக’’.

நோன்பு வைக்க துஆ: ‘‘இந்த வருட ரமலான் மாதத்தின் இன்றைய பர்ழான நோன்பை அல்லாஹ்விற்காக நோற்க நிய்யத் செய்கிறேன்’’.

ஒரு மகத்தான மாதமாக ரமலான் நோன்பு மாதம் பூத்திருக்கிறது. முப்பது நாட்கள் பசித்து, தாகித்து அனுதினமும் ஆண்டவன் நினைப்புடனேயே முஸ்லிம்கள் காலம் கழித்திடும் அற்புத மாதம் இது. ‘ரமலான் மாதம் எத்தகையது என்றால் அம்மாதத்தில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடியதும் தெளிவான சான்றுகளைக் கொண்டதும் (நன்மை தீமைகளை) வேறுபடுத்திக் காட்டக் கூடியதுமான  திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்’ என்கிறது திருக்குர்ஆன். ஏழை வீட்டு பசியை மாளிகையை உணர வைக்கிற மகத்துவத்தை இம்மாதமே கொண்டிருக்கிறது.

கை நிறைய பணமிருந்தும், வகை வகையாய் உணவிருந்தும் எடுத்துத் தின்னாமல், அருந்தாமல் பசியில், தாகத்தில் இறையச்சத்தோடு நோன்பு நோற்கிற இந்நாட்கள் மகத்தானவை. ‘நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுடையோராக ஆவதற்காக உங்களுக்கு முன் சென்றவர்கள் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது’ என்கிறது குர்ஆன். பசி உணர்தல், உடல் நலன் தேற்றுதலும் கடந்து, நம்மை நாமே கட்டுப்படுத்தி உண்ணாமல், அருந்தாமல் தீயவை ஒதுக்கி இறையச்சத்தை இதயத்தில் நிரப்பும் மந்திரத்தையும் இந்த நோன்பு நாட்கள் தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது. ‘நோன்பு எனக்கே உரியது... அதற்கு நானே பரிசளிப்பேன்’ என்கிறான் இறைவன். படைத்தவனிடம்  பரிசு பெறுகிற பாக்கியம் மகத்தானதல்லவா?
 
(நாளையும் நோற்போம்...)

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • thaneerrr_kaari

  தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

 • gold_navaratchri11

  நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

 • balore_arrrres1

  சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

 • gasa_vanvali111

  காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

 • hondu_aaas1

  அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்