SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

2018-05-17@ 14:03:09

திருமலை: திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருகிற 21ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி 29ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி நேற்று காலை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. காலை 6 மணியளவில் சுவாமி துயில் எழுப்பப்பட்டு, முக்கிய சேவைகள் நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதிகளும், விமான கோபுரம், கொடிமரம் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி 6 மணி முதல் 8.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் கஸ்தூரி மஞ்சள், குங்குமம், கிச்சலிக்கட்டை, திரிசூணம் உட்பட பல்வேறு திரவியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, 8.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.  இதில், துணை செயல் அலுவலர் வரலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்