SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அஞ்சுகோட்டை அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்

2018-05-17@ 14:02:33

திருவாடானை: திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் ஜகத் ஜனனி அம்மன் கோயிலில் பால்குட திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாடானை அருகே அஞ்சுகோட்டையில் ஜகத் ஜனனி அம்மன் கோயில் திருவிழா கடந்த மே 12ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவில் ஒவ்வொறு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஐந்தாம் திருநாளான நேற்று சிறப்பு நிகழ்வாக பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

காப்பு கட்டியது முதல் விரதமிருந்து அஞ்சுகோட்டை கருப்பசாமி கோயிலில் இருந்து பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து கோயிலை வந்தடைந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோயில் நிர்வாகத்தாரால் அன்னதானம நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெற்றது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்