SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவரங்குளம் பிடாரி அம்மன் கோயில் தீமிதி திருவிழா : திரளான பக்தர்கள் வழிபாடு

2018-05-17@ 14:01:17

ஆலங்குடி: ஆலங்குடி அடுத்த திருவரங்குளம் பிடாரி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி கடந்த 8ம்தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு மண்டகப்படிதாரர்களால் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி வீதியுலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான 8ம் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் பால்குடம், பறவைக்காவடி, குழந்தைக்கு தொட்டி கட்டுதல், அலகு குத்தி வழிபாடு செய்தனர். இதனைத்தொடர்ந்து, நேற்று பக்தர்கள் தீமித்து வழிபாடு செய்தனர்.

பெண்கள் குடத்தில் நவதானியங்களை கொட்டி குடத்தின் மீது பலவண்ண மலர்களால் அலங்கரித்து மது எடுத்து வந்து கோயில் வாசலில் ஒன்றிணைந்து அம்மன் பாடல்களை பாடி பிடாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். மேலும், தங்கள் நிலத்தில் விளைந்த நெல்மணிகளை கொண்டு சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். இவ்வாறு செய்தால் மழை பெய்யும், விவசாயம் செழிக்கும், அம்மை போன்ற நோய்கள் தாக்காது என்பதற்காகவே இந்த மது எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

  • kannirpeoplvaj

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி

  • bjpvajpai123

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் வாஜ்பாய் உடல் - பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்