மகிழம்பூ முறுக்கு
2018-05-16@ 15:48:08

தேவையானவை:
பச்சரிசி - 5 கப்
புழுங்கல் அரிசி - 1 1/2 கப்
பொரிகடலை - 2 கப்
தேங்காய் - ஒரு மூடி
வெண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
செய்முறை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி, பொரி கடலை அனைத்தையும் வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி அரைத்து முதல் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும். அனைத்து மாவுகளையும் கலந்து வெண்ணெயை சேர்த்து பிசைந்து வைக்கவும். தேங்காய்ப்பாலில் உப்பு சேர்த்து அதையும் மாவுடன் சேர்த்து கட்டியாகப் பிசைந்து கொள்ளவும். முறுக்குக் குழலில் ஒரு கண் மகிழம்பூ அச்சுப் போட்டு அதில் மாவை வைத்து துணியில் கைச் சுற்று முறுக்கு போல் அளவாக அடுக்காக பிழிந்து சிறிது நேரம் காயவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கை அதில் போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.
மேலும் செய்திகள்
19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை