SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் தேரோட்டம்

2018-05-16@ 14:35:41

காரைக்குடி: காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் செவ்வாய் விழா கடந்த 8ம் தேதி மாலை காப்புகட்டுதலுடன் துவங்கி இரவு 9 மணிக்கு வெள்ளி சிம்ம வாகனம் வீதி உலா நடந்தது. 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை காமதேனு வாகனம், அன்ன வாகனம், கைலாச வாகனம், வெள்ளி ரதம், வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி கேடயத்தில் அம்பாள் புறப்பாடும் வீதி உலாவும் நடந்தது. 8ம் திருநாளான நேற்று காலை வெள்ளி கேடயத்தில் அம்பாள் புறப்பாடும், காலை 10.50க்கு மேல் 11.45க்குள் தேருக்கு அம்பாள் எழுந்தருளும், மாலை தேர் வடம்பிடித்தல், காட்டம்மன் கோயிலுக்கு அம்பாள் எழுந்தருளல் நடந்தது.

இன்று காலை 9 மணிக்கு தேர் கொப்புடையம்மன் கோவிலுக்கு திரும்புதலும், 17ம் தேதி காலை யானை வாகனத்தில் வீதி உலா, அன்று மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 6 மணிக்கு நாதஸ்வர கச்சேரி, 8 மணிக்கு கலை நிகழ்ச்சியும் இரவு 11 மணிக்கு தெப்பத்தில் அம்பாள் உலாவும், அதிகாலை புஷ்ப பல்லாக்கு நடக்கிறது. விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2018

    23-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Tuticorinturnsviolent5

    கலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

  • Anaithukkatchikootam

    திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் புகைப்படங்கள்

  • tributeUSgunfiredied

    அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி

  • ThooothukudiSterliteProtest

    போர்க்களமானது தூத்துக்குடி..ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கல்வீச்சு...துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்