SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமயபுரம் கோயிலில் பஞ்ச பிரகார விழா : நள்ளிரவில் அம்மன் 5 பிரகாரங்களில் வீதியுலா

2018-05-16@ 14:32:00

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நேற்று பஞ்ச பிரகார விழா நடைபெற்றது.  விழாவையொட்டி தங்கம், வெள்ளி குடங்களில் கொண்டு வரப்பட்ட புனித நீரில் அம்பாளுக்கு அபிஷேகம் நடந்து நள்ளிரவில் அம்பாள் ஐந்து பிரகாரங்களில் திருவீதி உலா வந்தார். சமயபுரம் மாரியம்மன் கோயில் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலம் ஆகும். இக்கோயிலில் அம்பாளுக்கு நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சபிரகாரம் எள்பது வசந்த உற்சவமாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்கள், ஐம்பெருங்கலை, ஐம்பெரும் பீடம், ஐம்பெரும் உயிர், அவஸ்தைகள் ஆகியவற்றை விளக்கும் விதத்திலும் மாயாசூரனை அம்பாள் வதம் செய்த உஷ்ண கிராந்தியை தணிப்பதற்காகவும் பஞ்சப்பிரகாரம் எனும் வசந்த உற்சவ விழா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு பஞ்ச பிரகார விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் அம்மன் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சபிரகார அபிஷேகம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அன்று காலை 6.30 மணியளவில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஒரு தங்க குடம் மற்றும் 25 வெள்ளி குடங்களில் புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அந்த புனித நீரைக் கொண்டு அம்மனுக்கு மதியம் 2 மணியில் இருந்து 5 மணி வரை வேதபாராயணம், வேதமந்திரம் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் மகா அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து இரவு 12 மணிக்கு அம்மன் வெள்ளி விமானத்தில் எழுந்தருளி மூலஸ்தான கருவறையை ஒட்டிய பிரகாரத்தில் ஒரு சுற்று, தங்க கொடி மரத்தைச் சுற்றி இரண்டாவது சுற்று, தங்க ரதம் வலம் வரும் பிரகாரத்தில் மூன்றாவது சுற்று, தெற்கு ரத வீதி, வடக்கு மடவாள வீதியில் நான்காவது சுற்று, கீழ ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதியில் ஐந்தாவது சுற்று என ஐந்து பிரகாரங்களில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.  விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தனர். அடுத்தடுத்த நாட்களில் அம்மன் தங்க சிம்ம வாகனம், முத்து பல்லக்கு, தங்க கமல வாகனம், வெள்ளி குதிரை, வெள்ளி காமதேனு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்