SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கோபூஜை

2018-05-16@ 14:31:25

சீர்காழி: சீர்காழியில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். இங்கு தமிழ்மாத பிறப்பையொட்டி கோபூஜை நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்து வினாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்காரம், தீபாரானை நடந்தது. தொடர்ந்து கோயில் கோசாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசுமாடு மற்றும் கன்றுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வஸ்திரம், மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் பசுவுக்கு பழங்கள், அகத்திகீரை, வெல்லம், அரிசி ஆகியவற்றை கொடுத்து வலம் வந்து வழிப்பட்டனர். இதில் கோபூஜை வழிபாட்டு குழுவினர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதேபோல் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் பிரம்மதீர்த்த குளத்தில் வைகாசி தமிழ் மாத பிறப்பையொட்டி அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. முன்னதாக மேள, தாளங்கள் முழங்க அஸ்திரதேவர் பிரம்மதீர்த்த குளம் எழுந்தருளினார். தீர்த்தக்குளத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்