SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வசந்தப் பெருவிழாவையொட்டி ஸ்ரீபூமாயி அம்மன் கோயிலில் முதல் தெப்பத் திருவிழா

2018-05-16@ 14:30:49

திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஸ்ரீபூமாயி அம்மன் கோயிலில் வசந்தப்பெருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதல் முறையாக தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப்பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். கடந்த மே.4ம் தேதி ஸ்ரீ பூமாயி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. மே.5ம் தேதி இரவு பூமாயி அம்மனுக்கு கொடியேற்றி காப்புக்கட்டப்பட்டு முதல் நாள் விழா துவங்கியது. பின்னர் அம்மன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி கோயில் குளத்தை சுற்றி வலம் வந்தார். 2ம் நாள் முதல் எட்டாம் நாள் வரை தினந்தோறும் இரவு அம்மன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி கோயில் குளத்தை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

6ம் நாளான்று பக்தர்கள் பூமாயி அம்மனுக்கு பால்குடம் எடுத்து வழிபட்டனர். 9ம் திருநாளன்று மாலையில் பூமாயி அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தேரில் எழுந்தருளி ஆறுமுகம்பிள்ளை தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, பஸ்ஸ்டாண்ட், வடக்கு ரதவீதி, கீழ ரதவீதி வழியாக வந்து கோயிலை அடைந்தார். 10ம் திருநாளில் மாலை கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இரவு 7.20 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பூமாயி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கோயில் திருக்குளத்தில் அம்மனுக்கு முதல் முறையாக தெப்ப திருவிழா நடைபெற்றது. தெப்பம் 7.40க்கு சுற்றப்பட்டு 8.30க்கு நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்