SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதியில் கோலாகலமாக தொடங்கிய தாதையகுண்டா கங்கையம்மன் கோயில் திருவிழா களைகட்டியது

2018-05-16@ 14:30:18

திருப்பதி: திருப்பதியில் பிரசித்தி பெற்ற தாதையகுண்டா கங்கையம்மன் கோயில் திருவிழா நேற்று களைகட்டியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஆடு, கோழி பலியிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். திருப்பதி நகரில் மாறுவேடத்தில் சுற்றித்திரிந்து மக்களுக்கு தொல்லை கொடுத்த அரக்கனை கண்டுபிடித்து வதம் செய்ய தினமும் கங்கையம்மன் ஒவ்வொரு வேடத்தில் அரக்கனை தேடி செல்வார். இந்நிலையில் 8வது நாளில் அரக்கனை கண்டுபிடித்து வதம் செய்து மக்களை காத்ததின் நினைவாக ஆண்டுதோறும் திருப்பதி தாதையகுண்டா கங்கையம்மனுக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது
அதன்படி, இந்தாண்டு திருவிழா சாட்டிப்பு நிகழ்ச்சியுடன் கடந்த 8ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

அப்போது, கோயில் வளாகத்தில் உள்ள கல்தூணுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு, மணப்பெண்ணுக்கு திருமணத்தின்போது மடிக்கட்டுவது போல் கல்தூணுக்கு மடிக்கட்டப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனை நடந்தது. தொடர்ந்து அன்று மாலை அம்மனின் தாய் வீடான அவிலாலா பகுதியில் இருந்து மஞ்சள், குங்குமம் உட்பட சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்டது. திருவிழாவின் 2வது நாளில் (பைராகி வேடம்) உடம்பு முழுவதும் சந்தனம் பூசிக்கொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 3வது நாளில் (பண்ட வேடம்) உடம்பில் குங்குமம் பூசிக்கொண்டு கறுப்பு மை பொட்டு வைத்து வந்தனர்.

4வது நாளில் (தோட்டி வேடம்) உடம்பில் கரிபூசிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். 5வது நாளில் (துரை வேடம்) கைகால குலத்தை சேர்ந்தவர்கள் ராஜா வேடம் அணிந்து வந்தனர். அன்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அம்மனுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், 6வது நாளில் (மாதங்கி வேடம்) ஆண்கள் பெண் வேடமணிந்து வந்து அம்மனை வழிபட்டனர். 7வது நாளான நேற்றுமுன்தினம் (சுனப்பு கொண்டலு) கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் 8வது நாளான நேற்று முக்கிய நிகழ்வான திருவிழா நடந்தது. அதிகாலை அம்மனுக்கு சாந்தி பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டும், பொங்கல் வைத்தும், தீச்சட்டி ஏந்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் நீண்ட வரிசையில் அம்மனை தரிசிக்க காத்திருந்தனர். இதில், அமைச்சர் அமர்நாத்ரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ், எம்எல்ஏ சுகுணா, தெலுங்கு தேசம் மாவட்ட தலைவர் நானி உட்பட பலர் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.
தெடார்ந்து நள்ளிரவு முதல் கல்தூண் பகுதியில் அம்மனின் பிரமாண்டமான சிரசு களிமண்ணால் உருவாக்கப்பட்டு இன்று அதிகாலை சிரசு கலைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. பின்னர் விஸ்வரூப தரிசனத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றைய தினம் அம்மனின் மண்ணை எடுப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள் என கூறப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • franvve_heavyrain

    பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பலத்த மழை : வெள்ளப் பெருக்கில் 13 பேர் உயிரிழப்பு

  • 16-10-2018

    16-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • HurricaneLesliePortugal

    போர்ச்சுக்கலை தாக்கிய 'லெஸ்லி' புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!

  • IndiaStatueOfUnity

    இறுதிப் பணிகள் நிறைவடைந்து கம்பீரமாய் காட்சியளிக்கும் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை: புகைப்படங்கள்

  • HBDAbdulKalam87

    ஏவுகணை நாயகன், மக்களின் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்களின் 87-வது பிறந்தநாள் இன்று..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்