SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா தேர்பவனி : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

2018-05-16@ 14:29:09

திருக்காட்டுப்பள்ளி:  தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை நவநாட்கள் பூஜைகளை அருட்தந்தையர்கள் நிறைவேற்றினர். நேற்று முன்தினம் காலை பூண்டிமாதா பேராலயத்தின் முன்னாள் பங்குதந்தைகள் லூர்துசேவியர் மற்றும் ராயப்பர் ஆகியோரின் நினைவு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி, திருவிழா கூட்டு திருப்பலியை நடத்தி “மரியா அருளின் ஊற்று” என்ற தலைப்பில் மறையுரையாற்றி ஆசி வழங்கினார். பின்னர் கோயில் முன் மல்லிகை மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட பூண்டி அன்னையின் அலங்கார, ஆடம்பர தேர்பவனியை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி புனிதப்படுத்தி துவக்கி வைத்தார்.

அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பூண்டி அன்னையே வாழ்க, மாதாவே வாழ்க என்று கோஷமிட்டனர். விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேர்பவனியில் குடந்தை மறைமாவட்ட பொருளாளர் பிலிப்சந்தியாகு, பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்கு தந்தையுமான பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், பூண்டிமாதா தியான மைய இயக்குநர் குழந்தைராஜ், உதவி தந்தைகள் அமலதாஸ், எடிசன்ராஜ், ஆன்மிக தந்தை அருளானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்கு தந்தையுமான பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ் செய்தனர். தேர்பவனியையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று காலை 6 மணிக்கு ஆயர் தலைமையில் நடந்த திருப்பலியில் குடந்தை மறைமாவட்ட முதன்மைகுரு அமிர்தசாமி மற்றும் பலர் பங்கேற்றனர். மாலையில் கொடியிறக்கம் நிகழ்ச்சி நடந்தது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2018

    23-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Tuticorinturnsviolent5

    கலவர பூமியாக மாறிய தூத்துக்குடி: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு 5 ஆக உயர்வு

  • Anaithukkatchikootam

    திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் புகைப்படங்கள்

  • tributeUSgunfiredied

    அமெரிக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி

  • ThooothukudiSterliteProtest

    போர்க்களமானது தூத்துக்குடி..ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கல்வீச்சு...துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்