SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிதம்பராபுரம் புனித யாகப்பர் ஆலய திருவிழாவில் சப்பர பவனி

2018-05-15@ 16:07:54

சாத்தான்குளம்:  சாத்தான்குளம் அருகேயுள்ள சிதம்பராபுரம் புனித யாகப்பர் ஆலய திருவிழா மே 4ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இத்திருவிழா மே 13ம்தேதி வரை 10 நாள்கள் நடந்தது. முதல்நாள் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி அதை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. விழாவுக்கு கொழுந்தட்டு பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் தலைமை வகித்து கொடியேற்றினார். ஆலய பங்குத்தந்தை பபிஸ்டன் வரவேற்றார். இதில் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளி முதல்வர் செல்வராயர்  உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். 2ஆம் நாள் சாத்தான்குளம் இணை பங்குத்தந்தை ராயப்பன் தலைமையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி நடந்தது.

3ம்  நாள் முதல் 7ஆம் நாளான 10ஆம்தேதி வரை தினமும் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பங்குத்தந்தைகள் தட்டார்மடம் ரத்தினராஜ், மன்னார்புரம் சகாயராஜ், பிரகாசபுரம் தோமாஸ், பெருமாள்மலை பன்னீர்ராஜா, பெங்களுர் மேற்படிப்பு அருள்தந்தை அற்புதசேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 8ம் நாளான 11ம்தேதி காலை 7 மணிக்கு கொடைக்கானல் பெருமால்மலை பங்குத்தந்தை பன்னீர்ராஜா தலைமையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி, மாலை 7மணிககு  சாத்தான்குளம் மறை மாவட்ட முதன்மை குரு  ரெமிஜியுஸ் தலைமையில் நற்கருணை பவனி நடந்தது. இதில்  இலங்கநாதபுரம்  பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் மறையுரை வாசித்தார்.

9ம் நாளில் காலை 7மணிக்கு கடக்குளம் பங்குத்தந்தை பிராக்ரஸ் தலைமையில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல அதிபர் ஜோசப்ரவிபாலன் தலைமையில் ஜெபமாலை, பெருவிழா மாலை ஆராதனை நடந்தது. மேரி இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளி முதல்வர் செல்வராயர், கூடுதாழை பங்குத்தந்தை அந்தோனி ஜெகதீசன், மறையுரை வழங்கினர். தொடர்ந்து இரவு 8மணிக்கு புனித யாகப்பர் திருஉருவப்பவனி நடந்தது. 10ம் நாளில் காலை 7மணிக்கு  செட்டிவிளை பங்குத்தந்தை பீட்டர்பால் தலைமையில் பெருவிழா திருப்பலி நடந்தது. இதில் கடக்குளம் பங்குத்தந்தை பிராக்ரஸ், செல்வராயர் மறையுரை வழங்கினர். மாலை 5மணிக்கு புனித யாகப்பர் சப்பர பவனி நடந்தது. இரவு 8மணிக்கு கொடியிறக்கம் நடந்தது. ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை பபிஸ்டன் தலைமையில் விழாக் குழுவினரும், கிறிஸ்தவ மக்கள் செய்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்