SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வைகாசி மாதத்தில் என்னென்ன விசேஷங்கள்?

2018-05-15@ 10:18:34

வைகாசி 1, மே 15. செவ்வாய்.  

ஸர்வ அமாவாசை  பிரதமை. வீரபாண்டி ஸ்ரீ கெளமாரியம்மன் பொங்கல் பெருவிழா. விஷ்ணுபதி புண்யகாலம். திருப்பதி கங்காஜாத்ரா முடிவு. சமயபுரம் மாரியம்மன் பஞ்சபிராகாரம். குடியாத்தம் கங்கையம்மன் சிரசு உற்சவம்.

வைகாசி 2, மே 16, புதன்.

துவிதியை. கார்த்திகை விரதம். சந்திர தரிசனம், சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் உற்சவாரம்பம். வீரபாண்டி ஸ்ரீகெளமாரியம்மன் விடையாற்று உற்சவம். சந்திர தரிசனம், வேளூர் கிருத்திகை.

வைகாசி 3, மே 17. வியாழன்.


திரிதியை. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் முத்துப்பல்லக்கில் பவனி வரும் காட்சி. மதுராந்தகம் ஸ்ரீராமர் மூன்று தினம், கோடை உற்சவ ஆரம்பம்.

வைகாசி 4, மே 18, வெள்ளி

சதுர்த்தி. மெலட்டூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் புறப்பாடு. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் தங்கக் கமல வாகனத்தில் பவனி. ஸ்ரீமத் ஆண்டவர் ரங்கராமானுஜ மகாதேசிகன்
திருநட்சத்திரம்.

வைகாசி 5, மே 19. சனி.

பஞ்சமி. மாயவரம், நயினார்கோவில், காளையார் கோவில், உத்தமர் கோவில், திருப்பத்தூர் இத் தலங்களில் சிவபெருமான் உற்சவாரம்பம். திருநறையூர் நம்பியாண்டார் நம்பி திருமுறை விழா. பகவான் சங்கர நாராயணன் பரப்பிரம்ம ஜெயந்தி.

வைகாசி 6, மே 20, ஞாயிறு.

சஷ்டி. சப்தமி. திதித்வயம். நமிநந்தியடிகளார் குருபூஜை. சேக்கிழார் அடியவர் குரு பூஜை. திருமோகூர் காளமேகப் பெருமாள், நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடையநாயகி இத்தலங்களில் உற்சவாரம்பம்.

வைகாசி 7, மே 21, திங்கள்.


அஷ்டமி. திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீகூடலழகர் இத்தலங்களில் உற்சவாரம்பம். சோமாசிமாறனார் குருபூஜை. ஸ்ரீரங்கம் வசந்த உற்சவம் ஆரம்பம், காஞ்சிபுரம் ஸ்ரீகுமரகோஷ்டம் தேவேந்திர மயில். சோழவந்தான் ஸ்ரீஜனகமாரியம்மன் உற்சவாரம்பம். திருமாகாளம் சோமயாஜி யாகம்.

வைகாசி 8, மே 22, செவ்வாய்.

நவமி. காளையார்கோவில் ஸ்ரீஅம்பாள் கதிர் குளித்தல், தபசுக் காட்சி. பழனி ஸ்ரீஆண்டவர் உற்சவாரம்பம். திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் வசந்த உற்சவ ஆரம்பம். காரைக்குடியை அடுத்த பள்ளத்தூர் ஸ்ரீபெரிய நாயகியம்மன் திருத்தேர்.

வைகாசி 9, மே 23, புதன்.

தசமி. திருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜப் பெருமாள் சேஷ வாகனத்தில் ராமாவதார திருக்கோலம். ஒன்பது கருட சேவை.

வைகாசி 10, மே 24, வியாழன்.

ஏகாதசி. நாட்டரசன்கோட்டை ஸ்ரீகண்ணுடைய நாயகி வெள்ளிக் கேடயத்திலும், இரவு பூத வாகனத்திலும் பவனி.

வைகாசி 11, மே 25, வெள்ளி.

துவாதசி. திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் காலை காளிங்க நர்த்தனம். மாலை வேணுகோபாலர் திருக்கோலம். திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர்
அதிகார நந்தி. ஸர்வ ஏகாதசி, திருவிடைமருதூர் திருக்கல்யாணம்.

வைகாசி 12, மே 26, சனி.

திரயோதசி. அரியக்குடி ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம். திருமோகூர் காளமேகப் பெருமாள் வைரச்சப்பரத்தில் பவனி. திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் திருக்கல்யாணம். ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள் ஜெயந்தி.

வைகாசி 13, மே 27, ஞாயிறு.

சதுர்த்தசி. மகாபிரதோஷம். மாயவரம், திருவாடானை, நயினார்கோவில், திருப்பத்தூர் இத்தலங்களில் சிவபெருமான் தேரோட்டம்.

வைகாசி 14, மே 28, திங்கள்.

பெளர்ணமி. வைகாசி விசாகம். நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி. பழனி முருகப் பெருமான், திருமோகூர் காளமேகப் பெருமாள் தலங்களில் தேரோட்டம். அக்னி நட்சத்திர முடிவு. நம்மாழ்வார். திருவண்ணாமலை கிரிவலம் 28.5.2018 இரவு 7.39 முதல் 29.5.2018 இரவு 8.32 வரை. காஞ்சிபுரம்  ஸ்ரீகுமரகோஷ்டம் ஸ்ரீஷண்முகர் ரதம், குரோம்பேட்டை, குமரன்குன்றம் முருகன் லக்ஷார்ச்சனை. பழநி பெரியநாயகியம்மன் தேர். திருப்போரூர் சிதம்பரஸ்வாமிகள் குருபூஜை. முடி கொண்டானில் ஆலங்குடி பெரியவா ஆராதனை.

வைகாசி 15, மே 29, செவ்வாய்.

பிரதமை. அரியக்குடி ஸ்ரீனிவாசப் பெருமாள், காட்டுபரூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் தலங்களில் தேரோட்டம். சீர்காழி ஸ்ரீதிருஞானசம்பந்தருக்கு ரக்க்ஷாபந்தனம், ஸ்ரீரங்கம் ஏகவசந்தம் சாத்துமுறை, திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் பிரம்மோற்சவம் முடிவு, ஸ்ரீசக்ரபாணி ஸ்வாமி தெப்பம், மன்னார்குடி. கருட சேவை, காஞ்சிபுரம் ஸ்ரீகுமரகோஷ்டம் ஸ்ரீவள்ளி கல்யாணம், காஞ்சி ஸ்ரீவரதர் கருடன். காஞ்சி மகாபெரியவா ஆராதனை.

வைகாசி 16, மே 30, புதன்.

துவிதியை. காட்டுபரூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் தெப்போற்ஸவம் கண்டருளல். தருமை சகோபுர ரிஷப வாகனம், காஞ்சி ஸ்ரீஏகாம்பர நாதர் திருக்கோயில் சர்வ தீர்த்தம் தெப்பம். சென்னை சேலையூர் ஸ்கந்தாஸ்ரமம் சாந்தானந்த ஸ்வாமிகள் ஆராதனை.

வைகாசி 17, மே 31, வியாழன்.

திரிதியை. காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலம். முருக நாயனார், திருஞானசம்பந்தர், திருநீலநக்கர், திருநீலகண்டபாணர் குருபூஜை. ஆச்சாள்புரம், ஸ்ரீதிருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம், பின்னிரவு விடியல் ஐக்கியம். தஞ்சை முத்துப்பல்லக்கு.

வைகாசி 18, ஜூன் 1, வெள்ளி.

சங்கடஹர சதுர்த்தி. திருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரி ராஜப் பெருமாள் புதிய வெள்ளி ரதத்தில் பவனி. குமரகுருபர சுவாமி குருபூஜை. சிவஸ்தலங்களில் வைசாகப் பெருவிழா ஆரம்பம். தருமை ஸ்ரீஞானம்பிகா சமேத ஸ்ரீஞானபுரீஸ்வர சுவாமிக்குத் திருக்கல்யாணம். வெள்ளிரதக்காட்சி. திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்து அதிபர் ஸ்ரீலஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மாகேஸ்வர பூஜை.

வைகாசி 19, ஜூன் 2, சனி.

பஞ்சமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை. சென்னை சைதை காரணீஸ்வரர் வேளூர் வசந்த உற்சவ ஆரம்பம், நம்பியாண்டார் நம்பி குருபூஜை. காஞ்சி ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயில் 1000 கால் மண்டபம் மெத்தை உற்சவம். காஞ்சி ஸ்ரீவரதர் ஸ்ரீதேவராஜஸ்வாமி திருக்கோயில் ரதோற்சவம்.

வைகாசி 20, ஜூன் 3, ஞாயிறு.

சஷ்டி. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி. திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் விடையாற்று உற்ஸவம்.

வைகாசி 21. ஜூன் 4, திங்கள்.

சஷ்டி. வாஸ்து நாள் (கா.10.06  கா. 10.42). கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. சிரவண விரதம். தருமை ஆதீனம் 26வது குருமஹா சந்நிதானம் சுவாமிகள் காவிரியில் திருமஞ்சனமாடிக் குருமூர்த்த வழிபாடு, காஞ்சி ஸ்ரீவரதர் ஸ்ரீதேவராஜ ஸ்வாமி திருக்கோயில் புண்ணியகோடி விமானம்.

வைகாசி 22, ஜூன் 5, செவ்வாய்.

சப்தமி. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். தருமை ஆதீனம் ஸ்ரீஞானபுரீஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் 108 சிவ பூஜகர்கள் சிவபூஜை புரிதல், தருமை 26வது குரு மஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஷண்முக தேசிக சுவாமிகள் பட்டினப்பிரவேசம். ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள் குருபூஜை.
மன்னார்குடி பெரியவா ஜெயந்தி.

வைகாசி 23, ஜூன் 6, புதன்.

அஷ்டமி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஸ்ரீநரஸிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

வைகாசி 24, ஜூன் 7, வியாழன்.

நவமி. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

வைகாசி 25, ஜூன் 8, வெள்ளி.

தசமி. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபத்திற்கு எழுந்தருளி பின் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

வைகாசி 26, ஜூன் 9, சனி.

ஏகாதசி. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயில் வரதராஜ மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

வைகாசி 27, ஜூன் 10, ஞாயிறு.

துவாதசி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரங்கமன்னார் இருவரும் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

வைகாசி 28, ஜூன் 11, திங்கள்.

திரயோதசி.  திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கழற்சிங்க நாயனார் குருபூஜை. சென்னை கந்தகோட்டம் புஷ்பநாக ஊஞ்சல்.

வைகாசி 29, ஜூன் 12, செவ்வாய்.

சதுர்த்தசி. கிருத்திகை. கார்த்திகை விரதம். சிதம்பரம். ஆவுடையார் கோவில் இத்தலங்களில் சிவபெருமான் உற்ஸவாரம்பம். வேளூர் மண்டலாபிஷேக கிருத்திகை.

வைகாசி 30, ஜூன் 13, புதன்.

அமாவாசை. திருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜப் பெருமாள் விபீக்ஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.

வைகாசி 31, ஜூன் 14, வியாழன்.

பிரதமை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீராமர்  மூலவருக்குத் திருமஞ்சன சேவை. புன்னாககெளரி விரதம்.

தொகுப்பு: ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்