SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி விழா கம்பம் நடுதலுடன் துவக்கம்

2018-05-14@ 17:50:21

கரூர்: கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி விழாவினை முன்னிட்டு நேற்று மாலை கம்பம் நடும் விழா நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கரூர் மாவட்டத்தின் கிராமங்களில் உள்ள கிராம கோயில்களின் விழா நிகழ்வுக்கு பிறகு கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி விழா நடைபெறுவது வழக்கம். மாவட்டத்தின் முக்கிய கோயில் பண்டிகையாக விளங்கி வரும் மாரியம்மன் கோயில் விழாவுக்காக கம்பம் நடும் விழா நேற்று மாலை நடைபெற்றது.கரூர் அமராவதி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்ட கம்பத்துக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்பட்டு, கம்பம் மேளதாளத்துடன், மாரியம்மன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கரூர் நகரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பூஜிக்கப்பட்ட கம்பத்துடன் ஊர்வலமாக கோயிலை நோக்கி வந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். முன்னதாக, பாலம்மாள்புரம் பகுதியில் இருந்து கம்பம் கோயிலில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. கடந்த 10 தினங்களுக்கு முன்பே, விரதமிருந்து, பூஜிக்கப்பட்ட கம்பத்தை, மேளதாளத்துடன், நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக வந்து கோயிலில் கம்பத்தை ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர், எம்எல்ஏ கீதா உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்