SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தென்காசி நடுமுத்தாரம்மன் கோயிலில் அக்னி சட்டி ஊர்வலம்

2018-05-09@ 12:18:33

தென்காசி: தென்காசி சம்பாத்தெரு நடுமுத்தாரம்மன் கோயிலில் சித்திரை மாத திருவிழா கடந்த 1ம் தேதி கால்நட்டுதலுடன் துவங்கியது. விழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. கொடை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் குற்றாலத்திலிருந்து புனித நீர் எடுத்து வருதல், இரவில் அம்மனுக்கு மாக்காப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று காலையில் கணபதிஹோமம் மற்றும் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. மதியம் சைவ வேளாளர் இளைஞரணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் கோயிலில் பொங்கலிடுதல், மஞ்சள் நீராடுதல், மாவிளக்கு எடுத்தல், அக்னி சட்டி ஊர்வலம், பூங்கிரகம் எடுத்து வந்து அம்மன் வீதி உலா நடந்தது. நள்ளிரவில் சாம பூஜை நடந்தது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்