SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரியமலை கோபாலகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம்

2018-05-09@ 12:18:03

மஞ்சூர்: மஞ்சூர் அருகே உள்ள கரியமலையில் பாமா, ருக்மணி சமேத கோபால கிருஷ்ணர் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல் காலபூஜை, அதை தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜை, கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கரியமலை காளியம்மன் கங்கையில் இருந்து 108குடங்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட புனிதநீர் ஊற்றி வேத, மந்திரங்கள் முழங்க நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கரியமலை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.  

இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கோபால  கிருஷ்ணர், பாமா, ருக்மணி ஆகியோருக்கு மகா தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காளியம்மன் கோயில் வருடாந்திர திருவிழா கொண்டாடப்பட்டது. பல்வேறு அபிஷேகங்களுடன் காளியம்மளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து அன்னதானம் மற்றும் படுகரின மக்களின் பாரம்பரிய நடனம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் குந்தை சீமைகுட்பட்ட 14ஊர் தலைவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்