SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மல்லிக்கல்மலை காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

2018-05-09@ 12:16:17

போச்சம்பள்ளி: மல்லிக்கல்மலையில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. அதையொட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிசெல்லம்பட்டி சாலையில், அண்ணாமலைபுதூர் அருகே மல்லிக்கல்லில் உள்ள 150 அடி உயர மலை உச்சியில் 700 ஆண்டுகால பழமைவாய்ந்த காலபைரவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல், நேற்று அஷ்டமியை முன்னிட்டு கோயிலில் சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.

அஷ்டலட்சுமியாகம், குபேரயாகம், தனகார்சன அதிருத்ரய யாகம் நடத்தப்பட்டன. இதைதொடர்ந்து  காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும், நடைபெற்றது. பின்னர் வேதபாராயணம், உபசார பூஜைகளும், மங்கல ஆர்த்தியும் 1,008 மந்திரங்கள்  முழங்க சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பைரவர் சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்று காலபைரவரை  வழிபட்டனர். பக்தர்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinaearthquake

    சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்

  • meteorshower

    ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்

  • indonesiaafterquake

    இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்

  • sijaapanda

    சீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • inpendencedayrehearsal

    செங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்