SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறம்காக்க அவதரித்த ஆதிசங்கரன்

2018-05-07@ 12:15:49

அறமழிந்து மண்ணில் தவமிழந்து உறவிலா மதங்கள் மேகமாய் நிறைவிலா கொள்கை கொண்டது! அறமென பாரில் இந்துமதம் தழைக்க ஆயிரமாதவன் ஒளிக்கதிர் ஞானமாய் ஆதிசங்கரன் காலடி உதித்தான்! காலடி உதித்த ஞானப்பிள்ளையவன் காலடியில் பணிந்தது காலச்சக்கரம்! பொய்நுரை பொங்கும் கடல்மூழ்கி மெய்க்கரை சேர்ந்த துறவி-தர்மம்மீது அக்கறை கொண்ட சக்கரவாகப்பறவை நன்மை, இன்பம் தரும் சங்கரப்பறவை!இரண்டல்ல ஒன்றென்பது அத்வைதம் இரக்கம் காட்டும் உயிர்களிடம் உயர்வேதம்!
மும்முறை பாரதம் வலம் வந்த பூப்பாதம்! முரண்பட்டவரை வென்றுநின்றதுன் வாதம்!

முப்பத்திரெண்டு அகவை அகிலம் வாழ்ந்தாய்!
மூப்பிலா வேதமளித்து குருவாய் உயர்ந்தாய்!
தாயை முதல் தெய்வம் என்றழைத்தாய்!
தடம்மாற்றி நதியை வீட்டுக்கழைத்தாய்!
சூரியகரத்தாலவள் சிதைக்கு தீ மூட்டினாய்!
இருள்சூழ் உலகில் ஞானதீ ஏற்றினாய்!
மனிதரில் வேறுபாடில்லை என்றாய்!
மனதின் வேறுபாடே கலகம் என்றாய்!
திருசக்கரம் பதித்தது உன் கரங்கள்-அந்த
திருக்கோவில் தோறும் குவிந்தது ஜனங்கள்!
நெல்லிக்கனி கொண்டு செல்வமழை பொழிந்தாய்!
புல்விளைந்த வீட்டில் நெல்மணிகள் குவித்தாய்!
உள்ளத்தின் அழகு உண்மை என்றாய்!
வாய்க்கழகு வாய்மை கடைபிடி என்றாய்!
ஆழிசூழ் உலகின் ஆதிகுருவே!
அர்த்தமுள்ள இந்துமத தியாக உருவே!
இளமை, செல்வம், ஆயுள் நிலைக்காது
இன்பம் தருமுன் வாய்மொழி ரத்தினமாலை!
வாழ்வுநெறி வகுத்து தந்த பரமகுருவே!
வானம், பூமி வணங்கும் வள்ளல்மனமே!
அறம்காக்க அவதரித்த ஆதிசங்கரன்
உரம்போட்டு பக்திவளர்த்த உத்தமகுரு!
மடங்கள் நிறுவி மனிதம் காத்த மகேசனவன்
மறைந்தும் வாழுகின்ற தெய்வ தத்துவம்!
மஞ்சள்வெயில் மேனியெங்கும் அன்பு முத்திரை
மண்ணுயிர் நலம் பெற வந்த சித்திரை!
பிறந்து பிறந்து இறக்கின்ற உலகினில்
கோவிந்தன் புகழ்பாடு மூடமனமே!
தாய் போற்று, குரு போற்று, வேதம் போற்று
தர்மம் போற்று, நலம் யாவும் நாடி போற்று!
சங்கரகுரு சரணடைவோம் சங்கடம் தீ்ர்ப்பான்!
சக்தியுடன் பரமன் வந்து முக்தியை தருவான்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்