SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம்

2018-05-03@ 14:41:44

பெரம்பலூர்:  பெரம்பலூர் அடுத்த சிறுவாச்சூர் அருள்மிகு மதுர காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கண்ணகியின் சினம் தணித்த இடமாகவும், திருஞான சம்மந்தரால் பாடப்பட்ட ஸ்தலமாகவும், இந்துசமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருந்திருவிழா சிறப்பாகக் கொண்
டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு சித்திரை பெருந்திருவிழாவையொட்டி கடந்த 17ம் தேதி பூச்சொரிதல் விழாவும், அதனைத் தொடர்ந்து கடந்த 24ம்தேதி இரவு 12 மணியளவில் பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கும், அதிகாலை 4 மணியளவில் மதுரகாளியம்மனுக்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, நாள்தோறும் இரவு அன்னவாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் பரிவார தெய்வங்களுடன் 2ம்தேதி வரை அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று அம்மனுக்குத் திருக்கல்யாணம் நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு அலங்காரம் செய்து, சிறப்பு அபிஷேகம் நடத்தப்ப ட்டது. பின்னர் கோயில் குருக்களால் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.

இதனை சிறுவாச்சூர் மட்டுமன்றி பெரம்பலூர், விளாமுத்தூர், செல்லியம்பாளையம், நொச்சியம், புதுநடுவலூர், நாரணமங்கலம், விஜய கோபாலபுரம் மற்றும் அரியலூர், திருச்சி, சென்னை, கடலூர், புதுக்கோட்டை மாவட்ட பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று (3ம்தேதி) காலை 10.30 மணிக்குள் நடைபெறு கிறது. சிறுவாச்சூரில் உள்ள பிரதான வீதிகள் வழியே இழுத்துச்செல்லப்படும் திருத்தேர் மாலையில் நிலைக்கு வந்த டையும். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பாரதிராஜா மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

 • comic_consandiego111

  சான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்