SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐயாறப்பர் கோயிலில் சப்தஸ்தான விழா : சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

2018-05-03@ 14:40:44

திருவையாறு: திருவையாறு ஐயாரப்பர் கோயில் சப்தஸ்தான விழாவில் சுவாமிக்கு பூ போடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கியது. கடந்த 24ம் தேதி மாலை தன்னைத்தான பூஜித்தல் நடந்தது. 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. கடந்த 28ம் தேதி தேரோட்டம் நடந்தது.

நேற்று முன்தினம் காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு நான்கு கோபுர தரிசனம் முடித்து திருப்பழனம் சென்றது. நேற்று தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூபோடும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் ஐயாறப்பருக்கு பொம்மை பூ போட்டது. இதைதொடர்ந்து 6 ஊர் பல்லக்குகளும் கோயிலுக்கு சென்றது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்