SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பர்கூர் திரவுபதியம்மன் கோயில் படுகளம் விழா : பக்தர்கள் கண்டுகளிப்பு

2018-05-02@ 14:20:49

கிருஷ்ணகிரி: பர்கூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள திரவுபதியம்மன் கோயிலில் மகாபாரத திருவிழா கடந்த மாதம் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயில் வளாகத்தில் பகலில் மகாபராத சொற்பொழிவும், இரவில் நாடகமும் நடந்து வந்தது. நேற்று காலை 10 மணிக்கு பர்கூர் 24 மனை தெலுங்கு செட்டியார் திருமண மண்டபத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, களி மண்ணால் செய்யப்பட்ட துரியோதனனின் உருவத்தை சுற்றி, பீமன், அர்ச்சுனன், கிருஷ்ணன் வேடம் அணிந்த நாடகக் கலைஞர்கள் துரியோதனனை வீழ்த்தும் காட்சிகளை அதற்குரிய கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர். இந்நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggooooverrr

    அமெரிக்காவில் கவர்னர் பதவிக்கான போட்டிக் களத்தில் திருநங்கை - தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை கவர்னர்

  • affffgaaaaa

    ஆப்கானிஸ்தானில் பள்ளியில் தற்கொலைப்படைத் தாக்குதல் - 48 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

  • iiiiiiiiiiitaaalyyy

    இத்தாலியில் நெடுஞ்சாலைப் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 39 பேர் பலி

  • keeeraaalaaaa

    கேரளாவில் கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70ஆக உயர்வு 14 மாவட்டங்களிலும் 'ரெட்' அலர்ட்

  • buildingggggg1234

    சுதந்திர தின விழா - நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் மூவண்ண நிறங்களில் ஜொலித்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்