SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

2018-04-28@ 13:01:33

பழநி:  பழநி மேற்கு ரத வீதியில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று இரவு நடந்தது. இரவு 7 மணிக்கு லட்சுமி சமேத நாராயண பெருமாளுக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க மங்கள நாண் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை மாற்றுதல், அப்பளம் உடைத்தல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. நாளை காலை 5.30 மணிக்கு தோள்கன்னியில் தேரேற்றமும், காலை 7.05 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா நடைபெறும் நாட்களில் கோயில் வளாகத்தில் பக்திச் சொற்பொழிவு, இன்னிசை, பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மற்ற கோயில்களில்...

*திண்டுக்கல் நேருஜிநகர் ஸ்ரீநவசக்திவிநாயகர் கோயிலில் மிதுன லக்னத்தில் நடராஜப்பெருமானுக்கும் ஸ்‌ரீ சிவகாமசுந்தரிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக யாகம் வளர்த்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் நேற்று மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மாப்பிள்ளை அழைப்பு, மாங்கல்யம்பூட்டுதல், மொய் எழுதுதல், விருந்து படைத்தல் என்று திருக்கல்யாண வழிபாடு களைகட்டியது.
* சின்னாளபட்டியில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது. திமுக.துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.
காலையில் மாப்பிள்ளை அழைப்பு வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து மணமக்கள் வீட்டார் சார்பாக காசியாத்திரை நடைபெற்று மணப்பெண்ணான மீனாட்சி அம்மனுக்கு பட்டுப்புடவைகள், பழவகைகள், பலகாரங்கள், சீர்வரிசை வழங்கப்பட்டது. வேத கோசங்கள் முழங்க ஸ்ரீ சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். தொடர்ந்து கல்யாண விருந்து அளிக்கப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்