SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருக்கல்யாணம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

2018-04-27@ 15:01:12

சீர்காழி: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சீர்காழியில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரம்மபுரீஸ்வரலர் திருநிலைநாயகி தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் திருஞானசம்பந்தருக்கு திருநிலைநாயகி ஞானபால் வழங்கிய நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் திருமுலைப்பால் விழாவாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டிற்கான திருமுலைப்பால் விழா கடந்த 21ம் தேதி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 6ம் நாள் விழாவான திருக்கல்யாண நிகழ்ச்சியில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி பல்லக்கில் எழுந்தருளி  வீதி உலா சென்றனர். பின்பு வசந்தமண்டபத்தில் பிரம்மபுரீஸ்வரர், திருநிலைநாயகி, திருஞானசம்பந்தர், விநாயகர், முருகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்